இரவில் திருடச் சென்ற இடத்தில் திருடனுக்கு நேர்ந்த சோகம்… மறுநாள் காலையில் பார்த்த வீட்டு உரிமையாளர்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Photo of author

By Sakthi

 

இரவில் திருடச் சென்ற இடத்தில் திருடனுக்கு நேர்ந்த சோகம்… மறுநாள் காலையில் பார்த்த வீட்டு உரிமையாளர்க்கு காத்திருந்த அதிர்ச்சி…

 

தெலுங்கானா மாநிலத்தில் திருடன் ஒருவன் திருடுவதற்காக வீட்டின் சுவரை ஏறி தரை என்று கிணற்றில் குதித்துள்ளான். மறுநாள் வீட்டின் உரிமையாளர் பார்க்கும் பொழுது கிணற்றில் உயிரிழந்து கிடந்த திருடனை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

 

தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சரியால் நகர் உள்ளது. அந்த நகரில் உள்ள ஒரு வீட்டில் திருடுவதற்காக திருடன் ஒருவன் இரவில் அந்த வீட்டின் சுவரில் ஏறியுள்ளான். பின்னர் கிழே தரை இருப்பது போல நினைத்து தவறி கிணற்றுக்குள் குதித்துள்ளான்.

 

இரவில் கிணற்றில் குதித்த திருடனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் கிணற்றில் மூழ்கிய அந்த திருடன் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.

 

மறுநாள் காலையில் எழுந்த வீட்டின் உரிமையாளர் எதர்ச்சியாக கிணற்றை வந்த பார்த்துள்ளார். அப்பொழுது கிணற்றினுள் உடல் மிதப்பதை பார்த்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

 

பின்னர் வீட்டின் உரிமையாளர் காவல் துறைக்கு புகார் அளித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வீட்டின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளனர்.

 

சிசிடிவியை ஆய்வு செய்து பார்த்ததில் சுவரின் மீது ஏறிய திருடன் தவறுதலாக கிணற்றினுள் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து திருடனின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல் துறையினர் உயிரிழந்த அந்த திருடன் யார் என்று தொடர்ந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.