பிரசவ அறுவை சிகிச்சையில் நடந்த விபரீதம்!! மருத்துவர்கள் மீது நடவடிக்கை!!
கடலூர் மாவட்டத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவவலி வந்து பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக குழந்தை பிறந்தது.
இந்த அறுவை சிகிச்சையின் போது இவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் குழந்தையை கருப்பையில் இருந்து வெளியே எடுத்த பிறகு, இப்பெண்ணின் கர்ப்பப்பையை குடலுடன் சேர்த்து தைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் இப்பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம் செய்தனர். இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் தாங்கள் இப்போதே தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என்றும், தங்கள் உடல் உறுப்புகளை இறந்த பிறகு தானமாக கொடுத்து விடுங்கள் என்றும் கூறி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சி கடலூர் மாவட்டத்தில் பொது மக்களிடையே அதிர்ச்சியையும், பயத்தையும் உண்டாக்கி வருகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.
எனவே காவல் துறையினர் அப்பெண்ணின் குடும்பத்தினரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவ்வாறு கர்ப்பப்பையுடன் குடலை சேர்த்து வைத்து தைத்த மருத்துவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மக்களின் உயிரோடு விளையாடும் இது போன்ற மருத்துவர்களுக்கு தகுந்த தண்டனையை வாங்கித் தர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.