திருப்பதி: திருப்பதி திருமலை தேவஸ்தானம் வருகிற வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பிற்கு இலவச தரிசன டிக்கெட் நேற்று வழங்கப்பட்டது. மேலும் இந்த இலவச தரிசன டிக்கெட் வாங்குவதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்த நிலையில் அந்த இடத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மொத்தம் அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதில் திருப்பதியை சேர்ந்த நான்கு பேர் மற்றும் சேலத்தை சேர்ந்த மல்லிகா., பொள்ளாச்சியை சேர்ந்த நிர்மலா ஆகியோர் ஆவர். மேலும் இந்த கூட்ட நெரிசலில் பலர் மிக அதிக படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளையும், உயர்தர சிகிச்சைகளையும் வழங்க வேண்டும் என அவர் உத்தரவு போட்டுள்ளர். இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தனது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துள்ளனர்.