ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சோகம்! கொரோனாவின் தாக்கம்!

ஒரே குடும்பத்தில் 4 பேர் பலியான சோகம்! கொரோனாவின் தாக்கம்!

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் நிலைமை கட்டுக்குள் வராமல் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் சென்று கொண்டு இருக்கிறது.

பிரபலங்கள் பலரின் மறைவுகள் நாம் அனைவரின் மனதையும் மிகவும் வருந்த செய்கிறது.இதை போல் பல்வேறு குடும்பங்களிலும் பல மரண சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

அதை போல் பெங்களூரில் உள்ள பாகல்கோட்டையிலும் ஒரு துயர சம்பவம் நடந்தேறி உள்ளது.ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.பாகல்கோட்டை மாவட்டத்தில் தேவிநாலா கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் ஒன்டிகோடி (வயது 46). இவரது மனைவி ராஜேஸ்வரி (44). இவர், பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 15 வயதில் மகன் உள்ளான்.

இந்நிலையில் வெங்கடேஷ் மற்றும் அவர் மனைவி இருவரும் உடல் நிலை சரி இல்லாத காரணத்தினால் மருத்துவமனை சென்றபோது பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் ராஜேஸ்வரியின் பெற்றோருக்கும் உடல் நிலை மோசமானதால் அவர்களுக்கும் உடல் பரி சோதனை செய்யப்பட்டது.

இதையடுத்து  ராஜேஸ்வரியின் தந்தை ராமனகவுடா (72), இவருடைய மனைவி லட்சுமிபாய் (68) ஆகிய 2 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் வயதான தம்பதிகளுக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்களும் மகள் ராஜேஸ்வரியுடன் தொடர்பில் இருந்ததால் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் பாகல்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து ஒவ்வொருவராக உயிரிழந்தனர்.

இவர்கள் அனைவரும் கொரோனாவின் காரணமாக தங்களது உயிரை இழந்தனர்.இவர்களை இழந்து 15 வயது மகன் யாரும் இல்லாத அனாதையாக உள்ளான்.இதற்காகவே அரசு நம்மை தனித்து இருப்போம், விழித்து இருப்போம் என்று கூறுகிறது.நாமும் அதை தொடர்ந்தால் எந்த தொற்றும் அண்டாமல் நிம்மதியாக இருக்கலாம்.

Leave a Comment