அவர் செய்தது தவறு என்றால் ஸ்டாலின் செய்வதும் தவறு தானே உணர்ந்து கொள்வார்களா திமுகவினர்?

0
67

நோய் தொற்றின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வந்ததால் பதினைந்து நாட்கள் முழு ஊரடங்கை அறிவித்தது மாநில அரசு. இதன் காரணமாக,வருமானத்தை இழக்கும் ஏழை, எளிய, மக்களுக்கு உதவி புரியும் விதமாக நான்காயிரம் ரூபாய் நிவாரண தொகையை இரண்டு தவணையாக வழங்குவதாகவும், தமிழக அரசு அறிவித்தது. இதில் முதல் தவணையாக 2000ரூபாய் நேற்று முன்தினம் முதல் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிவாரண நிதி வாங்குவதற்காக நியாய விலை கடை முன்பு ஏராளமானோர் நின்று வருகிறார்கள். பணம் வழங்கும் அவசரத்தில் தனிமனித இடைவேளை பின்பற்றப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இதையெல்லாம் உற்றுநோக்கினால் திராவிடர் முன்னேற்றக் கழகம் இந்த நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக முயற்சிகளை எடுக்கிறதா அல்லது இந்த நோய் தொற்று பரவும் ஆதாரத்திற்கு ஆரம்பப் புள்ளியாக இருப்பதற்கு விழைகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்த இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அன்று அதிமுக அரசு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக அதுவும் வீடு வீடாக நேரில் சென்று கொடுத்தது போல இதனையும் நடைமுறையை செய்திருக்கலாம். விவசாயிகளுக்கு 6000 ரூபாய் நிதியை தலா ஆயிரம் ரூபாய் வீதம் வங்கி கணக்கில் செலுத்தி இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசு போல இதனையும் செய்திருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளர் எஸ் ஆர் சேகர்.

அதோடு அவர் மேலும் தெரிவித்ததாவது விடியல் என்பது பொத்தானை அழுத்தி 9.5 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி 2000 ரூபாயை அவர்களுடைய வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தியதா அல்லது நோய்தொற்று நிதி என தெரிவித்து நோய் பரவ அதற்கு உதவி புரியும் விதத்தில் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு நியாயவிலை கடைகளில் வழங்கியதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பொங்கல் பரிசாக எடப்பாடி பழனிச்சாமி 2500 ரூபாய் வாங்கிய சமயத்தில் திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அரசாங்க பணத்தை, மக்கள் பணத்தை எடுத்து மக்களிடம் கொடுப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி யார் இது என்ன அவர்களுடைய அப்பன் வீட்டு சொத்தா என்ற விதத்தில் கடுமையாக விமர்சனம் செய்தார். இது அந்த சமயத்தில் மிகப் பெரிய விவாதப் பொருளாகியது . ஆனால் தற்சமயம் அதே விஷயத்தை தான் முதலமைச்சர் ஸ்டாலினும் செய்து வருகிறார் என்பது துரைமுருகனுக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது. அப்போது பழனிச்சாமி செய்தது தவறு என்றால் இப்போது ஸ்டாலின் செய்ததும் தவறு தானே இதனை திமுகவினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற பொதுவான கருத்து தமிழகத்தில் தற்போது உலாவிக் கொண்டிருக்கிறது.