சுற்றுலா சென்ற மாணவிகள் ஆற்றில் அடித்து சென்ற சோகம்! பள்ளியை பூட்டி சென்ற நிர்வாகம் பெற்றோர்கள் தவிப்பு!

0
131
Tragedy of schoolgirls who went on a trip were thrown into the river! The management that locked the school, the parents are distressed!
Tragedy of schoolgirls who went on a trip were thrown into the river! The management that locked the school, the parents are distressed!

சுற்றுலா சென்ற மாணவிகள் ஆற்றில் அடித்து சென்ற சோகம்! பள்ளியை பூட்டி சென்ற நிர்வாகம் பெற்றோர்கள் தவிப்பு!

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றது.அந்த வகையில் ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் அவர்களின் ஆசிரியர்களுடன் சிந்தூர் பகுதிக்கு சுற்றுலா சென்றார்கள். அப்போது சகிலேறு ஆற்றில் மாணவிகள் விளையாடி கொண்டிருந்தனர்.அந்நிலையில் கும்மாடி ஜெய ஸ்ரீ(14),சுவர்ண கமலா(14) மற்றும் கீதாஞ்சலி(14) ஆகிய மூன்று மாணவிகள் திடீரென ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

சக மாணவிகள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் மேலும் ஆசிரியர்கள் உடனடியாக போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர் அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதனையடுத்து ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவிகளை மீட்க தீவிரமாக  போராடினார்கள்.மேலும் பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு இரண்டு மாணவிகளின் உடலை போலீசார் கைப்பற்றினார்கள்.

இந்த சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர்களுக்கு எந்த ஒரு தகவலும் கொடுக்கவில்லை.பெற்றோர்கள் ஊடகங்கள் வாயிலாக தவலறிந்து விரைந்து சென்றனர்.அப்போது அந்த பள்ளி பூட்டப்பட்டிருந்தது அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அதனையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆற்றில் மூன்று மாணவிகள் அடித்து செல்லப்பட்ட நிலையில் இருவரின் உடல் கிடைத்தது மற்றொரு மாணவியின் நிலை தெரியவில்லை.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்சொகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleநாமக்கல் விவசாயிகளுக்கு குட் நியூஸ்!! இனி இதை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்!
Next articleபேருந்தில் மாணவிகளிடம் அவதூறு பேச்சு: சேலம் அரசு பேருந்து ஓட்டுனர் அதிரடி பணியிடை நீக்கம்!