சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு!
இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
உத்திர பிரதேச மாநிலம் ரிகாந்த் பகுதியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு தேசிய அனல்மின் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. இதேபோல, வேறொரு காலிய சரக்கு ரயிலும் இதற்கு எதிராக வந்து கொண்டிருந்தது. மத்திய பிரதேச சிங்ரவுலி பகுதி அருகே இந்த இரண்டு சரக்கு தொடர் வண்டிகளும் ஒன்றுக்கொன்று பலத்த சத்தத்துடன் நேராக மோதிக்கொண்டன. நிலக்கரி சரக்கை ஏற்றிவந்த தொடர்வண்டி வேகத்தின் காரணமாக தடம் புரண்டது.
இந்த எதிர்பாராத விபத்தில் இரண்டு ரயில்களின் ஓட்டுனர் மற்றும் உதவி ஓட்டுனர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு ரயிலுக்கு சிக்னல் அனுமதி கொடுத்த பாதையில் இன்னொரு ரயிலுக்கும் அனுமதி கொடுத்த காரணத்தால் இந்த விபத்து உண்டாகியுள்ளது. இந்த விபத்தை அறிந்த காவல்துறையினரும், தேசிய அனல்மில் கழகத்தின் நிர்வாகிகளும் விபத்து நடந்த இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கி இருக்கும் ஒருவரை மீட்க தொடர்ந்து போராடி வருகின்றனர்.