ரயில் பயணிகள் உஷார் இனி 10 மணிக்கு மேல் இதனை செய்ய கூடாது!! ஐஆர்சிடிசி எச்சரிக்கை!!

0
107
Train passengers beware!! Do not do this more than 10 o'clock!!
Train passengers beware!! Do not do this more than 10 o'clock!!

ரயில் பயணிகள் உஷார் இனி 10 மணிக்கு மேல் இதனை செய்ய கூடாது!! ஐஆர்சிடிசி எச்சரிக்கை!!

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றனர்.

சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் சேவைகளை  பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. இதில் வழங்கப்படும் குறைவான விலை டிக்கேட்களால் கோடி கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.இது ஏராளமான பொதுமக்களுக்கு மிகவும் சவுகரியமாக அமைகின்றது.

மேலும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகமும் பல சலுகைகளையும் ,வசதிகளையும் பயணம் செய்பவர்களுக்கு வழங்கி வருகின்றது. இந்தியாவில் பல புனித தளங்கள் உள்ளதால் அண்டை நாடுகளில் இருந்து பெரும்பாலான பொதுமக்கள் இந்தியாவிற்கு வருகின்றனர். இதனால் ஐஆர்சிடிசி  அசத்தல் அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.

மேலும் பயண சலுகையாக டிக்கெட்களுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் மூலம் இந்தியாவில் உள்ள பாரத் கவுரவ் ஹரித்வார் ,ரிஷிகேஷ் ,வைஷ்ணவி தேவி கோவில் ,அமிர்தசரஸ் ,மதுரா போன்ற பல இடங்களுக்கு செல்லும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயனடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது அறிவித்த அறிவிப்பில் ரயில் பயணிகள் இரவில் நிம்மதியாக தூங்குவதற்கு பல விதிகளை விதித்துள்ளது. மேலும் இந்த புதிய விதி வந்தே பாரத் போன்ற அனைத்து ரயில்களுக்கு உள்ளது. இரவு ரயிலில் பயணிக்கும் போது இரவு விளக்கை தவிர வேற எந்த விளக்கையும் பயன்படுத்தக் கூடாது.

மேலும் இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் சத்தமாக பேசக் கூடாது. அதனை  தொடர்ந்து ஆன்லைன் உணவு சேவைகளை இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் வழங்க முடியாது.  இதனையடுத்து இ கேட்டரிங் சாவிகள் மூலம் உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும் டிக்கெட் பரிசோதகர் கூட இருரவு 10 மணிக்கு மேல் பயணிகளின் டிக்கெட்டை சரி பார்க்க முடியாது என்று அறிவித்துள்ளது.

Previous articleதிருவண்ணாமலை கிரிவலம் செல்கிறீர்களா!! உங்களுக்கான அசத்தல் அறிவிப்பு இதோ!!
Next article“வேட்டையன் ராஜா” கதாபாத்திரத்தின் தோற்றம் வெளியானது!! மிரள வைக்கும் பார்வையில் ராகவா லாரன்ஸ்!!