இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும்

Photo of author

By Anand

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்பேருந்து,ரயில் மற்றும் விமானம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளன. இதனையடுத்து இந்தியா முழுவதும் ரெயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 200 ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த ரெயில்களுக்கு ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கபட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து இதற்கான டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று 22.05.2020 முதல் இயங்கும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல முதன்மை தலைமை வர்த்தக மேலாளருக்கு ரெயில்வே வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.

இன்று முதல் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தந்த மண்டலங்களில் எத்தனை டிக்கெட் கவுண்ட்டர்கள் திறந்திருக்க வேண்டும் என முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் முடிவு செய்து கொள்ளவேண்டும். 

மேலும் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு நிற்கவும், மேலும் அரசு அறிவித்துள்ள சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.