அடுத்த 3 நாட்களுக்கு இந்த நேரத்தில் வெளியே வர கூடாதாம்

0
64

ஒரு பக்கம் கொரோனாவின் அச்சுறுத்தல் மக்களை பயமுறுத்தி வரும் நிலையில் மற்றொரு பக்கம் அக்னி வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகிறது.

இந்நிலையில் வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கரையைக் கடந்து ஒடிசா, மேற்குவங்கத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

குறிப்பாக வட தமிழக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியிருந்தது.

இந்நிலையில் இன்று முதல் வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழகத்தை பொறுத்தவரை மக்கள் 11 மணி முதல் 3 மணி வரை காரணமின்றி வெளியே வரவேண்டாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

அதேநேரத்தில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னையை பொறுத்தவரை வானம் தெளிவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்ப நிலையாக 42 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 30 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K