ரயிலில் பயணம் செய்யக்கூடிய பயணிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்தியன் ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரயிலில் பயணம் மேற்கொள்ளக்கூடிய குறிப்பிட்ட நபர்களுக்கு ரயில் டிக்கெட்டின் விலையில் 50% சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சலுகை யார் யாருக்கு வழங்கப்படுகிறது. 50 சதவிகித சலுகையுடன் டிக்கெட்டுகளை எவ்வாறு பெறுவது என்பது குறித்த முக்கிய தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
IRCTC டிக்கெட் முன்பதிவில் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் ரயிலில் பயணம் செய்யும்பொழுது அவர்களுக்கு 50% சலுகை ஆனது வழங்கப்பட்டு வருகிறது. இதில் எப்படி மாணவர்கள் பயன்பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் பின்வருமாறு :-
✓ டிக்கெட் பெரும்பொழுது உங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரி ஐடி கார்டுகளை காட்டுவதன் மூலம் இந்த சலுகையை பெறலாம்
✓ 12 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க கூடியவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்
✓ டிக்கெட்டுக்கான முன் பதிவு பெரும் பொழுது செல்லுபடி ஆகக்கூடிய அடையாள அட்டையை காட்டுவது மிகவும் முக்கியமான ஒன்று
✓ டிக்கெட்டின் அடிப்படை மற்றும் பயண வகையின் அடிப்படையில் 10% முதல் 50% வரை சலுகைகள் வழங்கப்படுகிறது.
பொதுவாகவே இந்தியன் ரயில்வேயின் உடைய IRCTC ஆனது ரயிலில் பயணம் செய்யக்கூடிய பயனர்களுக்கு பல சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. அதில் குறிப்பாக சுப் யாத்ரா மற்றும் பாரத் தரிசனம் போன்ற திட்டங்களை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்வதற்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்யும்பொழுது இந்தியன் ரயில்வேயில் இருக்கக்கூடிய சலுகைகள் மற்றும் திட்டங்களை நன்கு அறிந்து அதன் பின் அவற்றின் கீழ் பயன்பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றில் வெகுமதி புள்ளிகள், தள்ளுபடிகள் மற்றும் கேஷ் பேக் போன்ற பல விஷயங்கள் வழக்கத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.