ரயிலில் பயணம் செய்பவர்கள் இதை கட்டாயமாக தெரிந்து கொள்ளுங்கள்!! 0.35 பைசாவில் 10 லட்சம் பணம்!!
வெறும் 0. 35 பைசா செலுத்தி 10 லட்சம் பெறுவதற்கான திட்டம் ஒன்றை பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அது என்ன திட்டம் அதை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ரயிலில் பயணம் செய்வதற்காக ஐஆர்சிடிசி எஃப் டி ஆர் என்று பல செயலிகளை முன்பதிவு செய்வதற்காக பயன்படுத்தி வருகிறோம். இந்த ஐ ஆர் சி டி சி இல் நாம் முன்பதிவு செய்யும்போது டிராவலிங் இன்சூரன்ஸ் என்று 0. 35 பைசாவை செலுத்துவோம்.
இதை கட்டாயமாக செலுத்த வேண்டும் என்பது கிடையாது. ஆனால் இந்த 35 பைசாவில் நிறைய பலன்கள் உள்ளது. இவ்வாறு முன்பதிவு செய்த ரயிலில் நாம் பயணம் செய்யும்போது இயற்கையாக இறந்து விட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டு இறந்து விட்டாலோ நமக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும்.
ஒருவர் இறக்காமல் அவர் உடல் முழுவதும் செயலிழந்து விட்டாலும் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதுபோல ஒரு கை செயலிழந்து இன்னொரு கை நன்றாக இருந்தால் 7,50,000 ரூபாய் இழப்பீடு கிடைக்கும். ஒருவேளை ரயிலில் பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் மருத்துவ செலவுக்காக 2 லட்சம் ரூபாய் தருவார்கள்.
இவை அனைத்துமே ரயில்வே சட்டத்தின் கீழ் வருகிறது. இதைப் பற்றி தகவல்களை தெரிந்து கொள்ள ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது இன்சூரன்ஸ் ஆப்ஷனில் டர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் அதை கிளிக் செய்தால் இதைப் பற்றிய முழு விவரங்களையும் படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த இன்ஷூரன்ஸ் பணத்தை பெறுவதற்கு நாம் ரயிலில் முன்பதிவு செய்த டிக்கெட், மருத்துவமனையில் தரக்கூடிய பில் மற்றும் மருத்துவமனையின் ரிப்போர்ட் முதலியவற்றை ரயில்வே துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவர்களிடம் இதை கொடுத்தால் அவர்கள் இதை உறுதி செய்து ஒரு பத்திரத்தை தருவார்கள்.
இவற்றையெல்லாம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் நாம் கொடுக்கும் போது நமக்கு ஏற்பட்ட விபத்திற்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகையை வழங்குவார்கள். நிகழ்வு நடந்த 12 மாதத்திற்குள் இதை செய்ய வேண்டும் இல்லை என்றால் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாது.
எனவே இது பற்றி தெரியாமல் இருப்பவர்கள் இனிமேல் இதை தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.