கட்டவண்டி போல் உருண்டோடும் ரயில்கள்!! ரயில்வே பயணிகள் அவஸ்தை!!
சேலம் கோட்டம் அருகே ரயில்வே பாதை நடைபெற்று வருகிறது. கேரளா கோவை ஈரோடு வழக்கமாக வரும் அனைத்து ரயில்களும் ஆங்காங்கே சற்று நிறுத்தி வருவதனால் காலை 10 மணிக்கு கோயம்புத்தூரில் புறப்பட்ட ரயில் மகுடஞ்சாவடி ரயில்வே நிலையத்திற்கு இரவு பத்து முப்பது மணிக்கு வந்து சேர்ந்தது. மேலும் ஈரோட்டில் மாலை 3 மணிக்கு ஏறிய பயணிகள் மகுடஞ்சாவடியில் இரவு 10:30 மணிக்கு வந்தனர்.
இதனால் ரயில்வே பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள்.இதுகுறித்து ரயில்வே பயணிகள் தெரிவிப்பது என்னவென்றால், இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு பகுதியில் ரயிலை நிறுத்திவிட்டு மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து ரயிலை செயல்பட வைக்கிறார்கள். இதனால் பணிக்கு செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் சில பேர் வாடகை வண்டியை வரச்செய்து வீட்டுக்கு திரும்ப செல்ல வேண்டிய நிலையில் உள்ளக்கப்படுகிரார்கள்.
மருத்துவத்துறையில் மற்றும் வெளியூர் பயணிப்போர் சரியான நேரத்திற்கு செல்ல முடிவதில்லை இதனால் அவர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். முக்கியமாக ரயிலில் கர்ப்பிணி பெண்களும் ஊனமுற்றோர்களும் மற்றும் கைக்குழந்தைகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் ரயில்வே பணி நடைபெறுவது குறித்து செய்தியை ரயில்வே நிர்வாகத்தினர் முன்கூட்டியே அறிவிப்பை வெளியிடாமல் திடீரென்று பணியை தொடங்கியுள்ளார்கள்.
இதனால் ரயில்வே பயணிகளாகிய நாங்கள் ரயில் பெட்டிகளிலேயே முடங்கிக் கிடக்கின்றோம் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர். இது போன்று முன் அறிவிப்பு இல்லாமல் பணிகளை மேற்கொள்வது பயணிகளுக்கிடையே அவஸ்தையை ஏற்படுத்துகிறது.