பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் திருநங்கை…. இவரின் நோக்கம் என்ன தெரியுமா?

0
230
#image_title

பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் திருநங்கை. இவரின் நோக்கம் என்ன தெரியுமா?

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து அகில பாரத மகா இந்து சபையின் வேட்பாளராக போட்டியிடுபவர் தான் திருநங்கை ஹேமாங்கி சகி. 46 வயதாகும் ஹேமாங்கி யார்? இவரின் பின்னணி என்ன? தேர்தலில் போட்டியிடுவதற்கான நோக்கம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம்.

குஜராத்தில் பிறந்து வளர்ந்து ஹேமாங்கியின் தந்தை திரைப்பட விநியோகஸ்தர் என்பதால், இவரின் குடும்பம் மும்பைக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஹேமாங்கியின் பெற்றோர் இறந்த பின்னர் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திய இவர் ஒரு சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

பகவத் கீதையின் ரசிகையான ஹேமாங்கி பகவத் கீதை, ராமர் கதை மற்றும் தேவி பகவத் கதை ஆகியற்றை உலகம் முழுவதும் பல இடங்களில் நிகழ்த்தி உள்ளாராம். உத்தரப்பிரதேசத்தின் நிமோகி அகாடா என்ற சாதுக்கள் அமைப்பை சேர்ந்த திருநங்கை மகாமண்டலேஸ்வரர் ஹேமாங்கி சகி தான் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிவில்லை என்று கூறியுள்ளார்.

அதாவது இவர் திருநங்கைகளின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காகவே அரசியலில் களமிறங்கி உள்ளாராம். மத்திய அரசு சார்பில் திருநங்கைகள் நலனுக்காக தனி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் அதுகுறித்து மத்திய அரசு விளம்பரம் செய்யவில்லை. அவர்கள் திருநங்கைகள் குறித்து கவலைப்படுவதில்லை.

இந்திய சமூகத்தில் திருநங்கைகளும் ஓர் அங்கம். ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியும் திருநங்கைகளை வேட்பாளராக அறிவிக்கவில்லை. அகில இந்திய இந்து மகா சபை என்னை வேட்பாளராக அறிவித்து நாட்டிற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் திருநங்கைகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க போகிறேன் என கூறியுள்ளார்.

Previous articleதயாரிப்பு நிறுவனத்தோடு சண்டையிட்ட விஜய்…. அடி மேல் அடி வாங்கும் எச் வினோத்…????
Next articleஇளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு கரூர் வைஸ்யா வங்கியில் அசத்தல் வேலை!! இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பம் செய்யுங்கள்!!