சனிப்பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0
172

சனிப்பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களே! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

 

27.12.2020 முதல் 19.12.2023 வரைதுல்லியமாக தன்னை சூழ்ந்து இருக்கும் சூழ்நிலைகளை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் செயல்படும் துலாம் ராசி நேயர்களே.சனியின் நாமம் : அர்த்தாஷ்டம சனிசனி பார்வையிடும் இடங்கள்3ம் பார்வை7ம் பார்வை 10ம் பார்வைரண ரோக ஸ்தானம் தொழில் ஸ்தானம்ராசிஉங்கள் ராசிக்கு மூன்றாம் இடமான தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து வந்த சனிபகவான் இப்போது உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் இருக்கிறார்.

சனி தான் இருக்கும் வீட்டில் இருந்து மூன்றாம் பார்வையாக ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக ஜென்ம ராசியையும் பார்க்கின்றார். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடலில் அதிக அசதி ஏற்படும். இளைய சகோதர வர்க்கத்தினரின் ஆதரவு சிறப்பாக அமையும். கணவன், மனைவியிடையே இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி மனநிம்மதி பெறுவீர்கள்.

நெருங்கிய உறவினர்களிடம் தேவையற்ற கருத்துக்கள் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைத்தாலும் அளவுடன் இருப்பது மேன்மையை அளிக்கும். மனதில் பலவிதமான சிந்தனைகளால் குழப்பமான சூழல் ஏற்படும். குடும்பத்துடன் வெளியூர் சென்று மகிழ்வதற்கான சூழல் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பணி நிமிர்த்தமான முக்கியக் கோப்புகளில் கவனம் வேண்டும்.

சனி பெயர்ச்சி பெண்களுக்கு : விரும்பிய இடத்தில் திருமணம் கைகூடும். சுயதொழில் புரிவோர் பொருளாதாரத்தில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும். புதிய வீடு, மனை வாங்கும் யோகம் ஏற்படும். தங்களது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மனதிற்கு பிடித்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உணவு விஷயத்தில் கவனம் வேண்டும்.

சனிப்பெயர்ச்சி மாணவர்களுக்கு :மாணவர்களுக்கு முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர்கல்வி படிப்பவர்கள் தங்களது படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக காத்திருப்பவர்கள் கவனத்துடன் செயல்படுவது அவசியம். பட்டப்படிப்பு படிக்க விரும்புவோர் வெற்றி காண்பீர்கள். கல்விக்கடன் தொடர்பான செயல்பாடுகள் இழுபறிக்கு பின்பே சாதகமாக அமையும்.

சனிப்பெயர்ச்சி உத்தியோகஸ்தர்களுக்கு :பதவி உயர்வுக்காக காத்திருப்போருக்கு பதவி உயர்வு சிறு அலைச்சலுக்கு பின் கிடைக்கும். பணியை விரும்பி செய்தால் முன்னேற்றமான வாய்ப்புகளும், நிரந்தர பணியும் சாதகமாக அமையும்.

வழிபாடு முறை :ஞாயிற்றுக்கிழமைதோறும் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபாடு செய்துவர முயற்சிகள் கைகூடும்.

 

Previous articleவரவிருக்கும் வரலட்சுமி விரதம்..பூஜை செய்யும் முறை!.நீங்கள் தயாரா? 
Next articleசேலத்தில் மழைநீர் வீட்டுக்கு புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி!.. அதிகாரியின் உறுதி நிறைவேறுமா?..