6 கிரகங்களில் பெயர்ச்சி – எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறதுன்னு தெரியுமா?

Photo of author

By Gayathri

6 கிரகங்களில் பெயர்ச்சி – எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறதுன்னு தெரியுமா?

அக்டோபர் மாதத்தில் 6 கிரகங்களின் பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதனால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் –

மேஷம்

அக்டோபர் மாதத்தில் 6 கிரகங்களின் பெயர்ச்சி நிகழப்போவதால், மேஷ ராசிக்காரர்களே உங்களது பேச்சில் கட்டுப்பாடு வேண்டும். தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். உடல் நிலை மோசமாக வாய்ப்புகள் உள்ளது. ஆதலால் உடல்நலனில் அக்கறை கொள்ளுங்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலை சீராக இருக்கும். சக ஊழியர்களுடன் இணைந்து செயல்படுவீர்கள். உங்களுடைய பண பரிவர்த்தனைகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் சில சில பிரச்சினைகள் ஏற்படும்.

ரிஷபம்

அக்டோபர் மாதத்தில் 6 கிரகங்களின் பெயர்ச்சி நிகழப்போவதால், ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு அதிர்ஷ்ட மாதமாக அக்டோபர் மாதம் இருக்கும். திடீரென்று பயணம் மேற்கொள்வீர்கள். பல நாட்களாக இருந்த தடைகள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பாராத வருமானம் கிடைக்கும். தொழில் வியாபாரம் சாதகமாக இருக்கும்.

மிதுனம்

அக்டோபர் மாதத்தில் 6 கிரகங்களின் பெயர்ச்சி நிகழப்போவதால், மிதுன ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதம் எந்த சச்சரவும் இல்லாமல் நிம்மதியாக இருப்பீர்கள். உங்களுடைய செல்வாக்கு உயரும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கம் அதிகரிக்கும். தொழிலில் நல்ல லாபம் அடைவீர்கள். செலவுகளை திட்டமிட்டு செலவிடுங்கள். வியாபாரத்தில் கடின உழைப்பு வேண்டும். உடல் நலனில் கவனம் தேவை.

கடகம்

அக்டோபர் மாதத்தில் 6 கிரகங்களின் பெயர்ச்சி நிகழப்போவதால், கடக ராசிக்காரர்களே உங்களுக்கு கைக்கு மேல் நல்ல பலன் கிடைக்கப்போகிறது. உங்களுடைய தொழில் சிறப்பாக இருக்கும். பல தடைகளை தாண்டி வெற்றி பெறுவீர்கள். பல விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்திலும், உறவினர்களிடமும் சில கருத்து மோதல்கள் ஏற்படும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலை சம்பந்தமாக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.