Tamilnadu Politics: அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஊக்க தொகை தாமதம் குறித்த ராமதாஸ் அறிக்கைக்கு அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு பிற வகையான பொதுத்துறையின் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை தமிழ்நாடு அரசு வாழ்க வலியுறுத்தி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.
தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து துறை மற்றும் பல்வேறு வகையான பொதுத்துறை ஊழியர்களுக்கான சி மற்றும் டி பிரிவினருக்கான தீபாவளி ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.
அதன் பின் அவர் அறிவித்து இன்றுடன் 20 நாட்கள் ஆகும் நிலையில் இன்னும் ஊக்கத்தொகை அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. ஊக்க தொகை வழங்குவதில் அரசு செய்யும் தேவையற்ற தாமதம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் x தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அரசு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மிகுந்த நெருக்கடியில் இருகின்ற நிலையிலும், முதல்வர் அவர்கள் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மற்றும் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு, 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகை ரூ.182.32 கோடி வழங்குவதற்கு உத்தரவிட்டு கழக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்தும் அறியாதது போல் பாமக நிறுவனர் ராமதாஸ் x தளத்தில் குறிப்பிட்டது தேவையற்றது.இவ்வாறு உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டது கண்டனத்துக்குரியது என்றும் கூறினார்.