வசமாக சிக்கிய கார் திருடன்! வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!

0
208
trapped car thief! Bleached public!
trapped car thief! Bleached public!

வசமாக சிக்கிய கார் திருடன்! வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!

கரோனா தொற்று தொடங்கிய நாள் முதல் சிறிது காலமாக கொலை ,கொள்ளை சம்பவங்கள் நடப்பது சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போதைய திருடர்கள் நூதன முறையை பயன்படுத்தி திருட ஆரம்பித்துவிட்டனர். சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் மக்களை நம்ப வைத்து சிலர் திருட்டு  செய்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் டெக்னாலஜி வழியாகவும் திருடுகின்றனர். மக்கள் இது போன்றவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பல விழிப்புணர்வுகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. இருந்தபோதிலும் மக்கள் சிலர் இவர்களிடம் மாட்டிக் கொண்டு விடுகின்றனர்.

சென்ற வாரம் திருப்பூர் அடுத்த ஒரு பகுதியில் கேஸ் ரிப்பேர் செய்ய அழைத்த ஒருவர் ,வீட்டில் வைத்திருந்த 3 சவரன் தங்க நகையை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பொழுது காவல்துறை தெரிந்தவர் மட்டுமே வீட்டில் உள்ளே அனுமதியுங்கள் தெரியாதவர்களை அனுமதிக்காதீர்கள் என்று கூறியது. அதே போல தான் தற்பொழுது மணப்பாறை அருகே ஒரு சம்பவம் நடந்துள்ளது. விட்டுச் செல்கின்ற கார், பைக் போன்றவற்றில் வைக்கப்படும் பணம் ,கைபேசி எதுவாக இருந்தாலும் சில திருடர்கள் அதனைக் கண்டு திருடிவிட்டு செல்வது வழக்கமாக வைத்துள்ளனர்.

ஆனால் மணப்பாறை அடுத்து வீரப்பூர் பகுதியில் சமீப காலமாக கார் கண்ணாடியையே உடைத்து மர்ம நபர்கள் காரினுள் இருக்கும் பணம் ,லேப்டாப் ,செல்போன் போன்றவற்றை திருடிச் செல்வது வழக்கமாக வைத்துள்ளனர்.இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த திருடனை தேடி வந்துள்ளனர். மணப்பாறையில் உள்ள திண்டுக்கல் சாலையில் ஒருவர் கடைக்கு செல்வதற்காக காரை லாக் செய்து விட்டு சென்றுள்ளார். இதை பார்த்த அந்த திருடன் அவர் வருவதற்குள் கார் கண்ணாடியை உடைத்து அதனுள் இருக்கும் பொருட்களை திருட முயன்றுள்ளான்.

அவ்வாறு திருட முயன்ற போது அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அந்த திருடனை வளைத்துப் பிடித்து விட்டனர். பிறகு அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் அந்த திருடன் பெயர் சரவணன் இன்றும் அவர் புங்கனூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. வீரப்பூர் பகுதியில் கார் கண்ணாடியை உடைத்து உள்ளிருக்கும் பொருட்கள் திருடியது இவர்தான் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

Previous articleசாப்பிட்டதற்கு பணம் கேட்டால் கடையை உடைப்போம்! கோயம்புத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்!
Next articleபல்கலைக்கழகத்தில் தேனிலவு ஏற்பாடு! அதிர்ச்சியில் பெற்றோர் மற்றும் மாணவர்கள்!