பல்கலைக்கழகங்களில் பணிபுரியவும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியவும் விரும்பக் கூடிய இளைஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முத்தான அறிவிப்பை TRB தேர்வு துறையானது வெளியிட்டிருக்கிறது.
TRB அறிவிப்பின்படி காலியாக இருக்கக்கூடிய துறை மற்றும் பணியிடங்கள் :-
✓ அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர், உதவி நூலகர் மற்றும் உடற்கல்வி உதவி இயக்குநர் – 232 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் – 4000 காலி பணியிடங்கள்
✓ முதுகலை ஆசிரியர்கள் – 1915 காலி பணியிடங்கள்
✓ பி.டி. உதவியாளர்கள் / பி.ஆர்.டி.இ – 1205 காலி பணியிடங்கள்
✓ வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) – 51 காலி பணியிடங்கள்
✓ சட்ட பேராசிரியர்கள் / உதவி பேராசிரியர் – 132 காலி பணியிடங்கள்
துறைகளும் துறை சார்ந்த தேர்வு தேதிகளும் :-
✓ SET – மார்ச்
✓ அண்ணா பல்கலைக்கழக தேர்வு – ஏப்ரல்
✓ சட்டப் பேரசிரியர்களுக்கான தேர்வு – மே
✓ கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு – ஜூலை
✓ முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகைத் தேர்வு – செப்டம்பர்
✓ முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பி.டி. உதவியாளர் தேர்வு – நவம்பர் & டிசம்பர்
✓ வட்டாரக் கல்வி அலுவலர் (BEO) தேர்வு – மார்ச் , 2026
ஆசிரியர் பணியில் சேர நினைக்கக்கூடிய இளைஞர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த தேர்வு தேதிகள் ஆனது தற்காலிகமானது என்றும் பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யும் தேர்வு செய்திகளை இறுதியாக இருக்கும் என்றும் TRB தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.