ட்ரெட்மில் பயிற்சி vs சாதாரண நடைபயிற்சி!! உடல் எடை மளமளவென குறைய எதை செய்ய வேண்டும்!! தெரிந்துக்கொள்ளுங்கள்!!

Photo of author

By Divya

ட்ரெட்மில் பயிற்சி vs சாதாரண நடைபயிற்சி!! உடல் எடை மளமளவென குறைய எதை செய்ய வேண்டும்!! தெரிந்துக்கொள்ளுங்கள்!!

கடந்த காலங்களில் அதிகாலையில் எழுந்து பூங்காக்கள் அல்லது சாலைகளில் வாக்கிங்,ஜாகிங் செய்வது என்று இருந்த மக்கள் தற்பொழுது வீட்டிற்குள் ஓர் இடத்தில் இருந்தபடி ட்ரெட்மிலில் பயிற்சி செய்யும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்கள்.

உடல் புத்துணர்வு இருக்க,உடல் எடை கட்டுக்குள் இருக்க நடைபயிற்சி அவசியமான ஒன்றாக இருக்கும் பொழுது ட்ரெட்மில்லில் நடைப்பயிற்சி மேற்கொள்வது பெஸ்டா? இல்லை சாதாரண நடைபயிற்சி செய்வது நல்லதா? என்று அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

வயதானவர்களால் நீண்ட தூரம் நடக்க முடியாமல் போவதால் அவர்களுக்கு ட்ரெட்மில் நடைபயிற்சி பலனளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.தினமும் 40 நிமிடங்கள் ட்ரெட்மில்லில் நடந்தால் இரத்த அழுத்தம் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும்.

மன ஆரோக்கியம் மேம்பட மாலை நேரங்களில் ட்ரெட்மில்லில் பயற்சி செய்யலாம்.உஙகள் உடல் எடை இழப்பிற்கு ட்ரெட்மில் உதவியாக இருக்கும்.மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்களுக்கு ட்ரெட்மில் வாக்கிங் பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால் எந்த உபகரணமும் இல்லாமல் சாதாரண நடைபயிற்சி மேற்கொள்ளும் பொழுது இயற்கையை ரசிக்க கூடிய வாய்ப்பு கிடைக்கின்றது.இதனால் மன அழுத்தம்,மனசோர்வு நீங்குகிறது.சாதாரண நடைபயிற்சி உடல் தசைகளில் உள்ள கலோரிகளை வெளியேற்றி உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ட்ரெட்மில் பயிற்சி நல்லது என்றாலும் சாதாரண நடைப்பயிற்சி உங்கள் உடலின் அனைத்து பாகங்களையும் சீராக செயல்பட வைக்கிறது.இளம் வயதினர் தினமும் 30 நிமிடங்கள் சாதாரண நடைபயிற்சி மேற்கொண்டு வந்தால் வயதான பிறகு வரும் பாதிப்புகளை தடுத்து உடல் ஆரோக்கியத்தை காக்க முடியும்.அதேபோல் மூட்டுவலி உள்ளவர்களுக்கு,வயதானவர்களுக்கு ட்ரெட்மில் நடைபயிற்சி சிறந்த தீர்வாக இருக்கிறது.