பால் கொழுக்கட்டை இப்படி செய்து விநாயகருக்கு விருந்து வையுங்கள்!!
பால் கொழுக்கட்டை என்பது சுவையான இனிப்பு பண்டமாகும்.இவை விநாயகருக்கு பிடித்த உணவுகளில் ஒன்றாகும்.இந்த விநாயகர் சதுர்த்திக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை கடைபிடித்து சுவையான பால் கொழுக்கட்டை செய்து விநாயகருக்கு பரிமாறுங்கள்.
தேவையான பொருட்கள்:-
அரிசி மாவு – 1 கப்
பழுப்பு சர்க்கரை – 1/4 கப் முதல் 1/2 கப் வரை
பால் – 1 1/2 கப்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
தேங்காய் – 2 தேக்கரண்டி (துருவியது)
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:-
1.முதலில் பாத்திரம் எடுத்து அதில் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
2.ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு,சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து,மென்மையான மற்றும் ஒட்டாத அளவிற்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
3பின்னர் ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து உள்ளங்கையில் வைத்து மற்றொரு உள்ளங்கையால் உருட்டி சிறிய ஓவல் வடிவ கொலுகட்டையாக மாற்றி கொள்ளவும்.
4.ஒரு பாத்திரம் எடுத்து 1/4 கப் தண்ணீரை அதனை சூடு படுத்தவும்.பின்னர் செய்து வைத்துள்ள கொழுக்கட்டையை போட்டு,பிறகு பால் சேர்த்து கொதிக்க விடவும்.
5.குங்குமப்பூ,சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
6.இறுதியாக துருவிய தேங்காய் சேர்க்கவும்.