ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஸ்டாலின் விவகாரம்!

Photo of author

By Sakthi

பச்சை துண்டை போட்டுக்கொண்டால் விவசாயி ஆகிவிட இயலுமா என முதல்வரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் திமுகவின் தலைவர் ஸ்டாலின் தானும் ஒரு விவசாயி என்று ஸ்டாலின் மேலும் தெரிவித்ததாவது தானும் ஒரு விவசாயி எனவும் விவசாயிகளின் நண்பன் எனவும் சொல்லிக்கொண்டிருக்கும் முதல்வரை விவசாயிகளின் எதிரி என்று விமர்சனம் செய்து இருக்கின்றார் ஸ்டாலின்.

இந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.சென்ற 2016ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததைதான் பாஜக திட்டங்களாக கொண்டு வந்திருக்கின்றது பிறகு எதற்காக திமுக எதிர்க்கிறது என கேள்வி எழுப்பியும் அதே சமயம் முதல்வரை விமர்சிப்பதற்க்கு எதிராகவும் அதிமுகவினரும் பாஜகவினரும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

சமீபகாலமாக ஸ்டாலின் தோப்பா வைத்திருப்பதாகவும் இப்போது விவசாயிகளின் போராட்டத்தையும் அந்த டோப்பா விவகாரத்தையும் ஒன்றிணைத்து அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் அதனை பாஜகவினர் பகிர்ந்து வருகிறார்கள்.