திமுக-வை ஒழிக்க முக்கோண அரசியல் வியூகம்!! கைக்கொடுக்குமா அதிமுக நாதக கூட்டணி!!    

திமுக-வை ஒழிக்க முக்கோண அரசியல் வியூகம்!! கைக்கொடுக்குமா அதிமுக நாதக கூட்டணி!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் அவர்கள் கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழாவை நடத்தியுள்ளார். இதில் மாவட்ட ரீதியாக முதலிடம் பெற்ற மாணவர் மற்றும் மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.இந்த விருது விழாவில் விஜய் அவர்கள் பேசியது தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக ஆளும் கட்சியை எதிர்த்து இவரது பேச்சு இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சி சீமான் இவர் நடத்திய விழா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.சமீபத்தில் விக்கிரவாண்டி தேர்தலில் அதிமுக ஆதரவைத் தேடிய சீமான் தற்பொழுது விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளது முக்கோண அரசியல் வியூகம் இருப்பதாக கூறி வருகின்றனர்.

முன்னதாகவே நாம் தமிழர் கட்சிக்கு விஜய் அவர்கள் பாராட்டு தெரிவித்த பொழுது இருவருக்கிடையே கூட்டணி என்று பேசி வந்தனர். இதனிடையே அதிமுகவும் விஜய்யுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்தது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் சீமானின் இந்த பதிவு மூன்று புள்ளியையும் சேர்க்கும் வகையில் இருப்பதாக கூறுகின்றனர்.மேலும் சீமான் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது,

“கல்வி என்பது மானுட உரிமை. அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை. ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது.

‘பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த காலத்தில், ஏழை – பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழகம் முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ – மாணவியரை அழைத்து, பாராட்டுச் சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய்க்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.