முட்டாளையும் புத்திசாலியாக்கும் டிரிக்ஸ்!! மூளையின் செயல்திறனை அதிகரிக்க டிப்ஸ்!!

Photo of author

By Divya

முட்டாளையும் புத்திசாலியாக்கும் டிரிக்ஸ்!! மூளையின் செயல்திறனை அதிகரிக்க டிப்ஸ்!!

Divya

மனிதர்கள் அனைவருக்கும் புத்திசாலியாக செயல்பட வேண்டுமென்கிற ஆசை இருக்கிறது.ஆனால் வாழ்க்கையில் எல்லா கட்டத்திலும் யார் தங்கள் புத்திசாலி தனத்தை காட்டிக்கிறார்கள் என்பது தான் மிக முக்கியமான விஷயம்.அதி புத்திசாலி என்று சொல்லப்படும் சிலர் சில நேரங்களில் வாழ்க்கையில் சறுக்கல்களை சந்திக்கின்றனர்.

நாம் புத்திசாலி என்பதை நமது நுண்ணறிவு செயல்திறன் தான் நிரூபிக்கிறது.இவுலகில் உள்ள 100% மக்களில் அதிகபட்சம் 2% மக்கள் தான் 130க்கு மேல் நுண்ணறிவு திறனை கொண்டிருக்கின்றனர்.

அசாத்திய மூளை திறன் என்பது பிறவிலேயே இருக்க வேண்டுமென்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.உண்மையில் நாம் வாழும் வாழ்க்கையின் மூலமும் நமது நுண்ணறிவு திறனை அதிகப்படுத்தலாம்.நுண்ணறிவு திறன் என்பது அறிஞர்களுக்கு மட்டும் தான் இருக்கும் என்பது இல்லை.சாதாரண மக்களுக்கும் நுண்ணறிவு திறன் அதிகமாகவே இருக்கும்.

நுண்ணறிவு திறனை அதிகப்படுத்தும் பழக்கங்கள்:

1)நம் மூளையை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.அதற்காக நாம் ஆரோக்கியமான பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.செஸ் போன்ற மூளையை யோசிக்க வைக்கும் வியாட்டுக்களை அதிகம் விளையாட வேண்டும்.

2)உங்கள் சிந்தனையை அதிகப்படுத்தும் ஓவியங்கள்,எழுத்து பயிற்சி உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும்.

3)நமது மூளையை சிந்திக்க வைக்கும் விளையாட்டுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.தொடர்ந்து இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடினால் நுண்ணறிவு திறன் அதிகரிக்கும்.

4)மனம் மற்றும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஆசனம்,தியானம் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும்.இதனால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.

5)புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வத்தை புகுத்த வேண்டும்.அதேபோல் தங்களுக்கு பிடித்த மொழிகளை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்ட வேண்டும்.

6)தேவை மற்றும் தேவையில்லாத இடத்தில் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.பிறரிடம் விவாதம்,கோபம் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

7)தங்களுக்கு பிடித்த விஷயங்களை பற்றி சிந்திக்க வேண்டும்.ஒரு செயலை தங்கள் கண் முன்னர் நிறுத்தி சிந்திக்க வேண்டும்.இதுபோன்ற பழக்கங்கள் மூலம் உங்கள் மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தலாம்.