பட்டப்பகலில் பேராசிரியியிடம் நகையைப்பறிக்க முயன்ற ஆசாமிகள்…! போலீசாரிடம் சிக்கியது எப்படி …!

Photo of author

By Sakthi

பட்டப்பகலில் பேராசிரியியிடம் நகையைப்பறிக்க முயன்ற ஆசாமிகள்…! போலீசாரிடம் சிக்கியது எப்படி …!

Sakthi

Updated on:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கல்லூரி பேராசிரியையிடம் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை படிப்பதற்கு முயற்சி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சாத்தான்குளம் அருகே இருக்கும் மணிநகர் ராமநாதபுரத்தை சேர்ந்த கோபால் என்பவரின் மகள் வசந்தி. இவர் கொம்மடிக்கோட்டை யில் இருக்கும் ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில், நேற்றைய தினம் கல்லூரி முடிந்து இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த அவரை அடைக்கலாபுரம் அருகே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் வசந்தியை வழிமறித்து கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.

இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டதில், பக்கத்தில் இருந்த ஒரு சிலர் கொள்ளையர்கள் இருவரையும் பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். காவல்துறையின் விசாரணையில் அவர்கள் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலை சார்ந்த முருகன் மற்றும் கதிர்வேல் என்பது தெரியவந்தது. உடன்குடியில் இருக்கும் உறவினரை பார்க்க வந்தபோது நகையை பறிக்க முயற்சித்தது தெரியவந்திருக்கிறது. இது சம்பந்தமாக தட்டார்மடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.