மூன்று சந்தானங்களுடன் யோகிபாபு – வைரலாகும் டிக்கிலோணா போஸ்டர்கள்

Photo of author

By Parthipan K

மூன்று கதாபாத்திரங்களாக சந்தானம் மற்றும் யோகி பாபுடன் டிக்கிலோனா மூன்றாவது போஸ்டர் வெளிவந்தது.

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக தன் புது பயணத்தை தொடங்கினார் சந்தானம். அவரது படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.

தற்போது சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா என்ற படம் உருவாகிவரும் நிலையில் அதில் சந்தானம் முதல் முறையாக மூன்று கதாபாத்திரங்களாக நடித்துள்ளார். நேற்று முன்தினம் இந்த படத்தின் முதல் பார்வை(First Look) போஸ்டரை வெளியிபட்டது படக்குழு. அதில் சந்தானம் மூன்று விதமான கதாபாத்திரங்களில் இருப்பதாக காட்டப்பட்டது. ஒரு கதாபாத்திரம் கதாநாயகனாகவும், ஒன்று காமெடியனாகவும் மற்றும் மற்றொன்று வில்லன் என மூன்று விதமாக சித்தரித்திருந்தது அப்போஸ்டரில்‌.

அது மட்டுமின்றி நேற்று இரண்டாவது போஸ்டர் வெளிவந்தது. அதில் சந்தானம் பி.கே திரைப்பட அமீர் கான் போல் உடை எதுவும் இல்லாமல் இரண்டு நான்-ஸ்டிக் பாத்திரங்களை கொண்டு உடலை மறைத்துக்கொண்டு இருப்பது போல காட்டப்பட்டிருந்தது.

மேலும் ‘சொன்னது போலவே
முழு லுக் இதோ’ என சந்தானம் இந்த நிர்வாண கோலம் பற்றி நக்கலாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

இரண்டாவது போஸ்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் டிக்கிலோனா படத்தின் முன்றாவது போஸ்டர் வெளியிட்டது அப்படக்குழு. அந்த போஸ்டரில் சந்தானத்துடன் நடிகர் யோகி பாபுவும் இருந்தது திரைரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டியது.

சந்தானம் மட்டும் இருந்தாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அவரோடு தற்போது யோகி பாபுவும் இருக்கிறார் என்றால் சொல்லவா வேண்டும்.
சந்தானத்தின் முந்தைய படமான டகால்டி படத்திலும் யோகி பாபு நடித்து இருந்தாலும் பெரிய அளவில் படம் ஓடாததால். இந்த முறை கூடும் கூட்டணியாவது வெற்றிப்பெறுமா என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர் இப்படத்திற்காக.

இதைப்பற்றி ட்விட்டரில் தயாரிப்பு நிறுவனம் ‘மூன்று சந்தானம் = அதிகம் trouble. மூன்று சந்தானம் + யோகி பாபு = சொல்லவே வேணாம்’ என தெரிவித்துள்ளது.

கார்த்திக் யோகி இயக்கி உள்ள இப்படத்திற்கு டிக்கிலோனா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அனகா, ஷிரின் கஞ்ச்வாலா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், ராஜேந்திரன், என பலரும் இதில் நடித்து உள்ளனர்.

இதற்கு முன்பு மாநகரம் உள்ளிட்ட படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ளார் இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி டிக்கிலோனா படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்

ஆக்ஷன், செண்டிமெண்ட், ரொமான்ஸ் என ரசிகர்களை கவரும் வகையில் அனைத்தும் இந்த படத்தில் இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிக்கப்பட்டிருந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

டிக்கிலோனா படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார் அதனால் ரசிகர்களின் மத்தியில் பாடல்கள் மீதும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மூன்று போஸ்டர்களும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படம் எப்போது வெளியாகும் என்பது பற்றிய அறிவிப்பு ஊரடங்கு முடிந்தபிறகு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.