பிக்பாஸ் நான்காம் பாகத்தில் களமிறங்க உள்ள திரிஷா மற்றும் நயன்தாராவின் ஃபேவரிட்!

Photo of author

By Parthipan K

வருடம் ஒருமுறை நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் கலந்து கொள்ள போகிறார் என்ற ஆர்வம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதேபோல் இந்த வருடமும் பலரின் பெயர் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் ஆக அடிபடுகிறது.

இந்த சீசனில் தெரிந்த பெயர்கள் ஷாலு ஷம்மு , ரியோ ராஜ், லட்சுமிமேனன், அமுதவாணன், ஷிவானி நாராயணன், கிரண். இவரில் இவர்களில் யார் உறுதியாக பிக்பாஸில் செல்வார் என்று நிகழ்ச்சி தொடங்கும் போதுதான்  நமக்கு தெரியும்.

 ஒவ்வொரு வருடமும் பிக் வெறும் நடிகர்கள் நடிகைகள் மட்டும் கலந்து கொள்ளாமல் மற்றொரு துறையை சார்ந்தவர்களும் பங்கேற்பது வழக்கம். இந்த வருடம் நடிகைகள் திரிஷா  நயன்தாரா விற்கு ஸ்டைலிஸ்ட் ஆக பணிபுரிந்த ஸ்பெஷலிஸ்ட் கருன் ராமன் பங்கு பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

இவ்வாறு அப்பப்பப்பா கசிந்து வரும் தகவல்கள் தான் பிக்பாஸ பார்க்கும் ஆர்வத்தை மக்களிடையே தூண்டுகிறது. கரன் ராமன் ஃபேஷன் கொரியோகிராபர் ஆகவும் பிரபலங்களின் ஸ்டைலிஸ்டரகவும் பணிபுரிந்து வருகிறார்.இவர் சமூகத்தில் ஓரினச்சேர்க்கை குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்  கலர்ஸ் தமிழ் நடத்திய ரியாலிட்டி ஷோவான எங்க வீட்டு மாப்பிள்ளையில் ஆர்யாவுடன் இணைந்து பணிபுரிந்தார். இவர் மற்ற போட்டியாளர்களுக்கு செம டஃப் கொடுப்பார் என்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை