முதல் முறை 3 கோடி சம்பளம் வாங்கும் திரிஷா… எல்லாத்துக்கும் காரணம் அந்த படம்தான்!

0
200

முதல் முறை 3 கோடி சம்பளம் வாங்கும் திரிஷா… எல்லாத்துக்கும் காரணம் அந்த படம்தான்!

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதையடுத்து அவர் வம்சி இயக்கும் புதிய படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் வாரிசு படத்தை விட விஜய் அடுத்து லோகேஷ் இயக்கத்தில் நடிக்கும் தளபதி 67 படத்தின் மீதுதான் இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தளபதி 67 படத்தை மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இவர்கள் இருவரும் மாஸ்டர் என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்துள்ளனர். சமீபத்தில் லோகேஷ் இயக்கிய விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது.

இந்த படத்தில் விஜய்யுக்கு வில்லனாக சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட பல முன்னணிக் கலைஞர்கள் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அதுபோல கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்காக திரிஷா 100 நாட்கள் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்துக்காக அவர் மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம். இதுவரை அவர் வாங்கிய சம்பளத்திலேயே இதுதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த திரிஷாவுக்கு கோடிகளில் சம்பளம் வாங்குவதற்குக் காரணம் சமீபத்தில் அவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

Previous articleதங்கம் வாங்க சரியான நேரம்: தொடர்ந்து மூன்றாவது நாளாக கிடுகிடுவென சரியும் தங்கத்தின் விலை!!
Next articleதுணிவு படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் உரிமை… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!