பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல்! பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை

Photo of author

By Rupa

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல்! பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை

தமிழகத்தில் ஓராண்டு காலமாக இந்த கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது. இந்நிலையில் சென்ற வருடம் மக்கள் நலன் கருதி ஊரடங்கு போடப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி ஆல் பாஸ் செய்தனர். இதனையடுத்து மாணவர்கள் அடுத்த ஆண்டு வகுப்பிற்கு முன்னேறி சென்றனர்.

இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகமானதால் பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுத்தாலும் 60% மாணவர்கள் மட்டுமே பாடங்களை மீதமுள்ள 40 சதவீத மாணவர்களுக்கு போதுமான வசதிகள் இல்லாததால் அவர்களால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்களை பயின்றனர்.அதனால் தமிழக அரசு அவர்களுக்கு மீண்டும் தேர்வின்றி ஆல் பாஸ் செய்வதாக அறிவித்தது.

இந்த நிலையில் கல்லூரிகளில் அரியர் தேர்விற்கும் ஆல் பாஸ் செய்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. இந்த வழக்கிற்கான தீர்ப்பு நேற்று நீதிபதிகள் வழங்கினர். அதில் நீதிபதிகள் கூறியது, உயர் தேர்வு உள்ள மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

அத்தேர்வுகளுக்கு ஆல் பாஸ் என்று தமிழக அரசு அறிவித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது என்றும் கூறியுள்ளனர். ஆன்லைன் மூலமாக அரியர் தேர்வுகளை எழுத கல்லூரி செயலாளர்கள் அனைவரும் கலந்தோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

அதற்கு அடுத்தபடியாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் நடத்துவதில் சில நாட்களாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் பள்ளி கல்லூரிகள் திறந்து ஒரு மாதங்கள் கூட ஆகாத நிலையில் தஞ்சாவூரில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று உறுதியானது. அதனால் தற்போது தனது 12ஆம் வகுப்பிற்கும் தேர்வு நடத்தப்பட்டால் ஒருவேளை தொற்றானது அதிக அளவு பரவக்கூடும் என பேச்சு வார்த்தைகள் நடந்த வண்ணமே உள்ளன.

அதுமட்டுமின்றி தற்போது கொரோனா அதிக அளவு பரவி வருவதால் மீண்டும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் தேர்வு நடத்துவது என்பது மிகவும் அபாயத்திற்குள்ளானது. அதனால் பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை கூட்டம் நடத்துகிறது.