கடன் தொல்லை? வாங்கிய கடன் அடைய வழி பிறக்கும் இந்த மஞ்சள் தீபத்தை போட்டு வந்தால்!!
நாளுக்கு நாள் ஏற்றம் காணும் விலைவாசியால் நடுத்தர மக்கள் அன்றாடம் வாழக்கையை நடத்த சிரமப்படுகின்றனர்.சம்பாதிக்கும் பணம் 100 என்றால் செலவு 1000 ரூபாயாக இருக்கிறது.இதனால் பணப் பிரச்சனை ஏற்படுகிறது.
எதிர்பாராத செலவுகள் வந்து விட்டால் கடன் வாங்குவதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலையில் தான் சாமானியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் ஒருமுறை கடன் வாங்கி விட்டால் அதை அடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.காரணம் கடன் தொகைக்கு நாம் கட்ட கூடிய வட்டி தான்.சம்பாதிக்கும் பணமும் குடும்ப செலவிற்கு பற்றாமல் வாங்கிய கடனை அடைக்க வழி ஏதும் கிடைக்காமல் பயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை வெள்ளிக்கிழமை நாளில் செய்து வரவும்.
தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும்.பின்னர் அங்கு வைத்திருக்கும் மகா லட்சுமி தாயாரின் படத்தை துடைத்து மஞ்சள் குங்கும பொட்டு வைக்கவும்.பிறகு தரையில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி கொட்டி அதன் மேல் ஒரு வெற்றிலையை வைக்கவும்.
பிறகு அதன் மேல் ஒரு மண் அகல் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி மஞ்சள் திரி போட்டு தீபம் ஏற்றவவும்.வாங்கிய கடன் அடைந்து பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று லட்சுமி தாயாரிடம் மனதார வேண்டிக் கொள்ளவும்.இவ்வாறு தொடர்ந்து 11 வெள்ளிக்கிழமை செய்து வந்தால் வாங்கிய கடன் அடைய வழி பிறக்கும்.