அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு டிரம்ப் நிர்வாகம் ஒத்துழைக்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் டிரம்ப்பை தோற்கடித்து ஜோ பைடன் வென்றுள்ளார்.
எனவே தனது தோல்வியை தொடக்கம் முதலே மறுத்து வந்த டிரம்ப் பைடனுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.தற்போது டிரம்ப் நிர்வாகம்தான் அதிகாரத்தில் உள்ளது.
இருந்த போதிலும் ஜோ பைடன் அடுத்தாண்டு ஜனவரி மாதம்தான் பதவியேற்க முடியும் என்பதால் நிர்வாக ஒத்துழைப்பு அளிக்க டிரம்ப் மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே உளவுத் துறையின் செயல்பாடுகள், வெளி நாட்டு தலைவர்களின் தகவல்கள் குறித்தெல்லாம் அறிந்து கொள்ள வேண்டிய ஜோ பைடனுக்கு அத்தகைய தகவல்கள் கிடைக்கச் செய்வதில் ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து முட்டுக்கட்டையாக செயல்பட்டு வருகிறது என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.