அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவியுடன் இன்று காலை இந்தியாவுக்கு வருகை தந்தார் என்பதும் அவருக்கு பிரதமர் மோடி சிறப்பான வரவேற்பு அளித்தார் என்பதையும் சற்று முன்னர் பார்த்தோம்
இந்த நிலையி சற்று முன்னர் சபர்மதி ஆசிரமம் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அங்கிருந்த ராட்டை ஒன்றை பார்த்து அதிசயித்தார். மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய ராட்டை முன் உட்கார்ந்து பஞ்சிலிருந்து நூல் கோர்ப்பதை டிரம்ப் அவரே செய்து பார்த்தார். டிரம்ப் கையில் பஞ்சை வைத்து கொள்ள, டிரம்ப் மனைவி மெலானியா ராட்டையை சுற்ற பஞ்சிலிருந்து நூல் ஆக மாறும் காட்சியை பார்த்ததும் இருவரும் ஆச்சரியமடைந்தனர். இதுகுறித்து சபர்மதி ஆசிரமத்தில் உள்ளவர்கள் டிரம்புக்கு விளக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சபர்மதி ஆசிரமத்தில் இருந்த மூன்று குரங்கு பொம்மைகளை பார்த்து இதுகுறித்து விளக்கம் கேட்டார் டிரம்ப். நல்லவையே பார்க்க வேண்டும், நல்லதையே கேட்க வேண்டும், நல்லதையே பேச வேண்டும் என்று மனித வாழ்க்கைக்கு தேவையான முக்கிய குறிப்புகளை இந்த குரங்கு பொம்மைகள் விளக்குவதாக பிரதமர் மோடிக்கு டிரம்புக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமளித்தார்
சபர்மதி ஆசிரமத்தை சுமார் ஒரு மணிநேரம் சுற்றிப் பார்த்து இந்த ஆசிரமத்தை பார்த்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக டிரம்ப் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது