சமீபத்தில் அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். தற்போது அவர் அமைச்சரவைக்கு தேவையான அமைச்சர்கள் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களுக்கான பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாட தொடங்கிவிட்டனர். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மட்டுமல்லாமல் வேறு நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். கிறிஸ்துமஸ் ஆண்டு இறுதியில் வருவதால் புத்தாண்டும் சேர்த்து கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்திய மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா சென்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருவது வழக்கம் ஆனால் இந்த முறை இந்தியா வர முடியாத நிலையில் உள்ளனர் அங்குள்ள மக்கள். இதற்கு காரணம் அவர் அதிபர் தேர்தல் பிரசாரத்தில் அதிபர் ஆன உடன் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்துவதாக வாக்கு அளித்தார்.
இதனால் டிரம்ப் வருகிற ஜனவரி அதிபராக பதவியேற்க உள்ளார். அமெரிக்காவில் தங்கியுள்ள மற்ற நாட்டினர்களை ராணுவ உதவியுடன் கொத்து கொத்தாக நாடு கடத்துவார் என அச்சத்தில் உள்ளனர் பலர். ஒரு வேலை சொந்த நாட்டிற்கு சென்றால் திரும்ப முடியாத நிலை ஏற்படலாம் என அச்சப்படுகின்றனர்.