India: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் அங்கு வாழும் இந்தியர்களுக்கு சாதகமான பல அறிவிப்புகள் வெளியானது. இருப்பினும் இறக்குமதி ஏற்றுமதி வரி குறித்து காரர் அறிவிப்பையும் அதனுடன் வெளியிட்டார். எந்தெந்த நாடுகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு அதிகப்படியான வரியை விதிக்கிறார்களோ அதே போல் நாங்களும் அந்த நாட்டிற்கு வரிவிதிப்போம் என்று எச்சரித்தார். குறிப்பாக அதில் இந்தியா பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
மேற்கொண்டு அவர் இந்தியாவிற்கு கொடுத்த எச்சரிக்கை ஒன்றில், தங்களின் எந்த நாடுகள் வரி விதிப்பை அதிகம் படுத்தியுள்ளதோ அதேபோல் பதிலுக்கு நாங்களும் செய்வோம். இவர்கள் வரியை அதிகளவில் வசூலித்து தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்கின்றனர். அதன் வழியே நாங்களும் இனி பின்பற்றப் போகிறோம். சமரசமாக ஏற்றுமதி இறக்குமதில் வரி விதிப்பு இருக்கும் போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.
கூடுதலாக வரி விதிக்கும் நாடுகளுக்கு தான் இந்த எச்சரிக்கை என தெரிவித்துள்ளார். அதேபோல அதிகளவு வரி விதிக்கும் நாடுகளில் சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்டவை உள்ளனர். அந்த வரிசையில் நாமும் முன் வர வேண்டும். இவ்வாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிகளவு வரி விதித்தால் பெரும்பான்மையாக இந்தியா தான் பாதிப்பை சந்திக்கும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்தும் உள்ளனர்.
தற்பொழுது வரை அமெரிக்கா 10 சதவீதத்திற்கும் கீழ் தான் இந்தியாவிற்கு வரி விதிப்பு செய்து வருகிறது. ஆனால் அமெரிக்கா நிர்ணயித்துள்ள இந்திய இறக்குமதி வரியை காட்டிலும் 10% புள்ளிகளுக்கு அதிகமாக அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா வசூல் செய்கிறது. இது சமரசமற்று இருப்பதால் காலப்போக்கில் டிரம்ப் நெருக்கடி கொடுக்க ஆரம்பிப்பார். இவர் முன்னதாகவே வெளியிட்ட வரி ஏய்ப்பு குறிப்பில் சீனா முதலாவதாக உள்ளது. இந்த நாட்டிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளார்.
ஆனால் இவர் வெளியிட்டதில் முதல் 9 இடத்தில் உள்ளது. கால போக்கில் சீனா-வைப் போல இந்தியாவிற்கும் இந்த சூழல் உண்டாகும் என எச்சரித்துள்ளனர்.