அடுத்த 2 வாரத்திற்கு கொரோனா உச்சகட்டத்தை அடையும்! பீதியை கிளப்பிய டிரம்ப்!

0
191

அடுத்த 2 வாரத்திற்கு கொரோனா உச்சகட்டத்தை அடையும்! பீதியை கிளப்பிய டிரம்ப்!

உலக நாடுகளில் கொரோனா மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து வரும் ஆபத்தான நேரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா பற்றி பேசியது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

சீனாவில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து இருப்பதாக ஆறுதல் செய்தியை கேட்டாலும் இத்தாலி, ஸ்பெயின், பிரான்சு போன்ற நாடுகளில் கொரோனாவின் அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் மேலான நபர்கள் கொரோனா தொற்று ஆபத்தில் சிக்கியுள்ளனர். இந்த சூழல் மேலும் அதிகரிக்கும் என்பதுபோல் டிரம்ப்பின் பேச்சும் அமைந்துள்ளது.

டொனால்ட் டிரம்ப்பிற்கு பொருளாதாரத்தில் மீதுதான் கவலை என்றும் மக்கள் மீது அக அக்கறை இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. கொரோனா பாதிப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக மேற்கொள்ளவில்லை என்றும் ஒரு தரப்பில் குற்றச்சாட்டிய நிலையில், முறையான நடவடிக்கை எடுத்துவருவதாக அதிபர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பற்றிய அடுத்தகட்ட தகவலை டிரம்ப் பேசியுள்ளார். அடுத்த இரண்டு வாரங்களுக்கு கொரோனா பாதிப்பு உச்சகட்டமாக இருக்கும், இதனால் சமூக விலகல் உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிப்பதாக கூறியுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து மீள வரும் ஜீன் 1 ஆம் தேதி வரை ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். அதிபரின் பேச்சு அந்நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஐ எட்டியது
Next articleஏப்ரல் 14க்கு பிறகு ஊரடங்கு தொடருமா? மத்திய அரசு வெளியிட்ட அதிரடி தகவல்!