இந்தியாவை அம்பலப்படுத்திவிட்டோம்!. அதனால் வரியை குறைக்கிறார்கள்!. டிரம்ப் விமர்சனம்!..

Photo of author

By அசோக்

இந்தியாவை அம்பலப்படுத்திவிட்டோம்!. அதனால் வரியை குறைக்கிறார்கள்!. டிரம்ப் விமர்சனம்!..

அசோக்

trumph

அமெரிக்காவின் புதிய பிரதமராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இவர் பதவியேற்றது முதலே பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். முறைகேடாக அமெரிக்காவில் நுழைந்து வசித்து வந்த இந்தியா உள்ளிட்ட பல நாடுகளையும் சேர்ந்தவர்கள் கண்டறிந்து அவர்களை அவர்களின் சொந்த நாட்டுக்கே திருப்பு அனுப்பும் வேலையை முடுக்கிவிட்டார்.

இதில், இந்தியாவை சேர்ந்தவர்களை விமானத்தில் திருப்பி அனுப்பும்போது அவர்களின் கை மற்றும் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘இந்தியாவின் நட்பு நாடான அமெரிக்கா இப்படி செய்யலாமா?’ என அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பினார்கள். பல நாட்டை சேர்ந்த தலைவர்களும் இதை கண்டித்தார்கள்.

ஆனால், எங்கள் சட்டம் என்ன சொல்கிறதோ அதையே செய்து வருகிறோம். விதிமுறையை நாங்கள் மீறவில்லை என அமெரிக்க வெள்ளை மாளிகை விளக்கம் அளித்தது. ஒருபக்கம், பிரதமர் மோடி கை மற்றும் காலில் சங்கிலி கட்டியபடி டிரம்பின் அருகே அமர்ந்திருப்பது போல பிரபல விகடன் நாளிதழின் அட்டை படத்தில் போட்டு பாஜக அரசை அசிங்கப்படுத்தினார்கள்.

இந்நிலையில், இப்போது வரி விஷயத்தில் இந்தியாவை விமர்சனம் செய்திருக்கிறார் டிரம்ப். சில நாட்களுக்கு முன்பு பேசிய டிரம்ப். இந்தியா மற்றும் சீன நாடுகள் அமெரிக்கா மீது பெருமளவு வரிகளை விதிக்கின்றன. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்தியா 100 சதவீதத்திற்கு அதிகமாக வரியை விதிக்கிறது. எனவே, இந்தியா மீது அமெரிக்காவும் அதே அளவு வரியை விதிக்கும். ஏப்ரல் 2ம் தேதி முதல் அது அமுலுக்கு வரும் என அறிவித்தார். இதையடுத்து, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கா வாகனங்களுக்கான வரியை இந்தியா குறைத்தது.

இதைபற்றி கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் ‘இந்தியாவில் எங்களால் எந்த பொருட்களையும் விற்பனை செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு அதிக வரி வசூலிக்கப்படுகிறது. இப்போது இது அம்பலமாகிவிட்டதால் வரிகளை வெகுவாக குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டிருக்கிறது’ என பேசியிருக்கிறார்..