ஒரு முடி கூட கொட்டாமல் கருகருவென அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணி பாருங்க!

Photo of author

By Amutha

ஒரு முடி கூட கொட்டாமல் கருகருவென அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணி பாருங்க!

Amutha

ஒரு முடி கூட கொட்டாமல் கருகருவென அடர்த்தியாக வளர இதை ட்ரை பண்ணி பாருங்க! 

முடி சிறிது கூட கொட்டாமல் பளபளப்பாக அடர்த்தியாக வளர வேண்டும் எனில் இந்த ஹோம் ரெமிடியை பயன்படுத்தி பாருங்கள். இதை இரண்டு வாரம் பயன்படுத்தினாலே நல்லதொரு ரிசல்ட்டை கொடுக்கும்.

இந்த ஹேர் பேக்கை பயன்படுத்த தொடங்கும் பொழுது ஷாம்பு பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே ஷாம்பு பயன்படுத்தி இருந்தாலும் அதனால் ஏற்படும் கெமிக்கல் பாதிப்புகளை இந்த ஹேர் பேக் நீக்கிவிடும்.

மேலும் தலையில் ஏற்படக்கூடிய அரிப்பு, பொடுகு ஆகியவற்றை நீக்கிவிடும்.

இதற்கு முதலில் 5 செம்பருத்தி பூக்களை காம்பு நீக்கி விட்டு எடுத்துக் கொள்ளவும். நாட்டு செம்பருத்தி பயன்படுத்துவது நல்லது. சுத்தம் செய்த செம்பருத்தி பூக்களை ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ளவும். பிறகு இதில் இரண்டு ஸ்பூன் முதல் நாள் இரவு ஊற வைத்த வெந்தயத்தை சேர்க்கவும். அடுத்து இரண்டு ஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்.

இதை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் இதனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்க்கலாம். முடியானது மிகவும் வறட்சியாக இருக்கும் பொழுது இதனை பயன்படுத்தினால் நல்லது. இந்த ஹேர் பேக்கை முடியின் வேர்க்கால்களில் நன்கு படும்படி அப்ளை செய்ய வேண்டும். தலையில் அதிக அளவு எண்ணெய் பசை இருக்கக் கூடாது. சிறிதளவு மட்டுமே இருக்க வேண்டும்.

இதனை முடியின் வேர்க்கால்களில் நன்கு படும்படி தேய்த்து விட்டு ஒரு அரை மணி நேரம் ஊற விடவும். சைனஸ் தொந்தரவு இருப்பவர்கள் பத்து நிமிடங்கள் ஊறவிட்டால் போதும். பின்னர் தலையை அலச வேண்டும். ஷாம்பு பயன்படுத்தக் கூடாது. அரிசி கலந்த தண்ணீர் அல்லது சாதம் வடித்த கஞ்சியை பயன்படுத்தி தலையை அலசலாம். இதனால் உங்கள் கூந்தலானது பட்டுப்போல் மிருதுவாக மாறி இருப்பதை கண்கூடாக காணலாம்.