2 பொருள் போதும்! இனி தலை சீவும் போது ஒரு முடி கூட கொட்டாது! 15 நாளில் கொட்டிய இடத்தில் முடி வளரும்!

Photo of author

By Kowsalya

2 பொருள் போதும்! இனி தலை சீவும் போது ஒரு முடி கூட கொட்டாது! 15 நாளில் கொட்டிய இடத்தில் முடி வளரும்!

இன்றைய தலைமுறையினர் அனைவரையும் பாதிக்கக் கூடிய விஷயம் உண்டு என்றால் அது தலைமுடி பிரச்சனை. தலை முடி கொட்டினால் உடம்பில் ஏதாவது பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். ஹார்மோன் குறைபாடுகள், வயிற்று சம்பந்தமான நோய்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு தலைமுடி கொட்டுவது ஒரு அறிகுறி.அதுமட்டுமில்லாமல் பருவநிலை மாற்றங்களால் அல்லது வேறு ஷாம்பூ பயன்படுத்தினால் முடி கொட்டுவது போன்ற பிரச்சனை வரும்.

15 நாட்களில் முடி கொட்டிய இடத்தில் மீண்டும் வளர வைக்க இந்த முறையை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

1. ஏதாவது ஒரு அரிசி

2. சின்ன வெங்காயம்- 6

செய்முறை:

1.முதலில் ஏதாவது ஒரு அரிசியை எடுத்துக் கொண்டு அதை இரண்டு முறை கழுவி அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டு பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

2. பின் ஆறு சிறிய வெங்காயத்தை எடுத்து தோல் உரித்து கொண்டு அதனை சிறு துண்டுகளாக வெட்டி ஊற வைத்த அரிசியில் போடவும்.

3. அரிசி மற்றும் வெங்காயம் 12 மணிநேரம் ஊறவேண்டும்.

4. காலையில் தலைக்குக் குளிக்க போகிறீர்கள் என்றால் இரவே இதை ஊற வைத்து விடுங்கள்.

5. காலையில் எழுந்து ஊறவைத்த அரிசி மற்றும் வெங்காயத்தை ஒரு முறை நன்றாகக் கசக்கி விட்டு அதை வடிகட்டி அந்த தண்ணீரை ஒரு கண்ணாடி ஜாடியில் ஊற்றி பயன்படுத்தலாம்.

6. இதை நீங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

7. இந்த தண்ணீரை நன்றாக தலை முடியின் வேர்க்கால்களில் படும்படி நன்கு மசாஜ் செய்யவும்.

8. பின் மைல்டான ஷாம்பு கொண்டு தலைக்குக் குளித்து விடலாம்.

இதனை நீங்கள் தொடர்ந்து வாரத்திற்கு இருமுறை செய்துவர முடி கொட்டிய இடத்தில் மீண்டும் வளரத் தொடங்கும்.