உங்களுக்கு அழகான பொலிவான ஸ்கின் கிடைக்க இந்த Face Pack ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Rupa

சருமத்தை முறையாக பராமரித்தால் மட்டுமே வயதான பிறகும் இளமை தோற்றத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும்.ஆனால் இன்றைய பெண்கள் மார்க்கெட்டில் விற்கும் கெமிக்கல் க்ரீம் களை வாங்கி தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

நீங்கள் ஸ்கினிற்கு பயன்படுத்தும் பெரும்பாலான க்ரீம்கள் விரைவில் முதுமை தோற்றத்தை தங்களுக்கு கொடுத்துவிடும்.எனவே கெமிக்கல் க்ரீம்களை பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கின்ற பொருட்களை பயன்படுத்தி முகத்தை இளமையாகவும்,பொலிவாகவும் வைத்துக் கொள்ள முயலுங்கள்.

முகத்தை இளமை பொலிவுடன் வைத்துக் கொள்ள துளசி மற்றும் முல்தானி மெட்டியை பயன்படுத்தலாம்.ஒரு கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி துளசி பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி பொடி சேர்த்து கலந்து விடவும்.பிறகு அதில் தேவையான அளவு ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் சேர்த்து பேஸ்டாக்கி எடுத்துக் கொள்ளவும்.இதை முகம் முழுவதும் அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் முகத்தை கழுவவும்.இப்படி செய்தால் முகம் அழகாவும்,பொலிவாகவும் மாறும்.

அதுபோல் முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உளுந்து மாவை பயன்படுத்தலாம்.ஒரு கிண்ணத்தில் உளுந்து மாவு ஒரு தேக்கரண்டி மற்றும் காய்ச்சாத பால் இரண்டு தேக்கரண்டி சேர்த்து குழைத்து முகத்திற்கு அப்ளை செய்தால் முகம் பொலிவாகவும்,பளபளப்பாகவும் இருக்கும்.

அதேபோல் கடலை மாவு,முல்தானி மெட்டி பொடி மற்றும் ரோஜா இதழ் பொடியை ஒன்றாக மிக்ஸ் செய்து சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளவும்.இதை முகம் முழுவதும் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து வாஷ் பண்ணவும்.இப்படி செய்தால் முகம் பொலிவாக மாறும்.