ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்! முகம் பளிச்சென்று மாறிவிடும்!

Photo of author

By Kowsalya

ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்! முகம் பளிச்சென்று மாறிவிடும்!

Kowsalya

எவ்வளவுதான் பியூட்டி பார்லருக்கு போய் சென்று ஃபேஷியல் செய்தாலும், முகம் ஓரிரு வாரம் மட்டுமே அழகாக இருக்கும். இயற்கை முறையை பயன்படுத்தி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தும் பொழுது இயற்கையாகவே உங்களுக்கு முகப்பொலிவை தரும். இப்பொழுது அந்த மாதிரியான இயற்கை முறையை தான் பார்க்க போகிறோம். கட்டாயம் இதைப் பயன்படுத்திப் பாருங்கள் கண்டிப்பாக நல்ல பலன் கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:

1. ராகி மாவு 2 டீஸ்பூன்

2. தயிர் 2 ஸ்பூன்.

செய்முறை:

1. ஒரு பவுலை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் இரண்டு ஸ்பூன் அளவு ராகி மாவை சேர்த்துக் கொள்ளவும்.

3. ராகி மாவுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.

4. அவ்வளவுதான் ஃபேஸ் பேக் ரெடி.

இதை நீங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி 5 நிமிடம் நன்றாக தேய்த்து விட்டு 10 நிமிடம் காய வைத்த பின் தண்ணீர் கொண்டு கழுவி விடலாம்.

இதனை இரவு நேரங்களில் படுக்க செல்லும் முன் செய்து வரும்போது கூடுதலான நிறத்தைக் கொடுக்கும்.

குளிக்க பயன்படுத்தும் பொழுது சோப்பு பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமில்லை.

குளிக்கப் போகும் முன் தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு இந்த இயற்கை முறை ஃபேஸ் பேக்கை உடலில் தேய்த்து குளித்தால் உடனடி பளபளப்பு கிடைக்கும்.