10 நாள் இதை சாப்பிட்டு பாருங்கள்:? ஆயுசுக்கும் கண்ணாடியே போட மாட்டீங்க!

Photo of author

By Pavithra

10 நாள் இதை சாப்பிட்டு பாருங்கள்:? ஆயுசுக்கும் கண்ணாடியே போட மாட்டீங்க!

தற்போதைய காலகட்டத்தில் சிறு வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன்,லேப்டாப் போன்ற கண்களை பாதிக்கக்கூடிய மின்னணு கருவிகளை அதிகமாக உபயோகிக்கப்படுகின்றன.இதுமட்டுமின்றி தற்போது சிறு குழந்தைகளுக்கு பாட சுமையினால் மன அழுத்தம் ஏற்பட்டு தூக்கமின்மைக்கு காரணமாகிறது இதனால் கண் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இது மட்டுமன்றி நம் உணவு முறைகளும் தற்போது கண் கோளாறுக்கு காரணமாக இருக்கின்றன.

கண் பார்வை மங்குதல் பிரச்சனைக்கு நாம் கண்ணாடி அணிந்தாலும் அது நிரந்தர தீர்வாக இருப்பது இல்லை.கண் பார்வை மங்குதல் பிரச்சினையை நிரந்தரமாக நீக்கி,வாழ்நாள் முழுவதும் கண்ணாடி போடுவதை தடுக்க உங்களுக்கான இதோ ஓர் எளிய இயற்கை வழி.

தேவையான பொருட்கள்:

வல்லாரை கீரை பொடி: ஒரு டீஸ்பூன்

தேன்: ஒரு டீஸ்பூன்

பால் அல்லது மோர்:ஒரு டம்ளர்

இந்த 3 பொருள் போதும்,கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் பத்தே நாட்களில் தீர்க்க.

செய்முறை:

 

உங்கள் வீடுகளில் வல்லாரைக்கீரை கிடைத்தால் அதனை நிழலில் உலர்த்தி பொடி செய்து எடுத்துக் கொள்ளலாம்.அல்லது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் இந்த வல்லாரைக் கீரை பொடி கிடைக்கும் அதனை வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

இந்த வல்லாரைக் கீரை பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து,ஒரு டீஸ்பூன் தேனுடன் நன்றாக கலக்கிக் கொள்ளவேண்டும்.இதன் பிறகு ஒரு டம்ளர் மிதமான சூடு உள்ள பால் அல்லது ஒரு டம்ளர் மோரில் இந்த கலவையை நன்றாக கலந்து, 10 நாட்கள் வரை தினமும் ஒருமுறை குடித்து வரவேண்டும்.

பத்து நாட்களுக்கு பிறகு மாதம் இரண்டு முறை இதனை குடித்து வரவேண்டும்.

இதனை செய்வதற்கு 10 நிமிடம் போதும்.இதனை நாம் தொடர்ந்து குடித்து வருவதால் கண் பார்வை மட்டும் அல்லாமல்,குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.வல்லாரைக் கீரை குழந்தைகளின் ஞாபக சக்திக்கு முக்கிய பங்காற்றுகிறது.இதனால் குழந்தைகளுக்கு கண் பிரச்சனை நீங்குவதோடு,ஞாபக சக்தியை அதிகரிக்கவும்,இந்த வல்லாரை பொடி மற்றும் தேன் கலந்த பால் உங்களுக்கு உதவும்.