இறைவனை வழிபடும் நேரத்தில் உங்களுக்கு இப்படி நடந்ததுண்டா?

0
82

இறைவனை வழிபடும் நேரத்தில் உங்களுக்கு இப்படி நடந்ததுண்டா?

கண்களில் கண்ணீர் வரும் அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா? கண்களுக்கு புலப்படாத ஒரு சக்தியை நாம் வழிபட்டு வருகிறோம். அந்த சக்திக்கு இறைவன் என்றும் பெயர் வைத்துள்ளோம்.

கண்ணுக்கு புலப்படாத கடவுளாக இருந்தாலும் கண்கண்ட தெய்வமாக மக்கள் வணங்குவதற்கு காரணம் என்ன? கடவுளின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை தான். கடவுளை மனதார நினைத்து உணர்ந்து வழிபடுபவர்களுக்கு, கண்ணுக்குப் புலப்படாத கடவுள் இந்த பூமியில் இருக்கின்றார் என்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

சிலர், வீட்டு பூஜையறையில் அந்த இறைவனை வழிபடும்போதோ அல்லது ஏதோ ஒரு கோவிலுக்கு சென்று இறைவனை மனதார நினைத்து வழிபடும்போதோ சில சமயங்களில், அவர்களை அறியாமலேயே அவர்களது கண்களிலிருந்து கண்ணீர் வரும் அனுபவத்தை பெற்றிருப்பார்கள். இந்த அனுபவம் நிச்சயம் நூற்றுக்கு 80% பேருக்கு தங்கள் வாழ்வில் நடந்திருக்கும்.

நீங்கள் இறைவனை வேண்டிக் கொள்ளும் சமயத்தில் உங்களது கண்களிலிருந்து கண்ணீர் வந்துள்ளதா? இதற்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள். இறைவனை மனதார நினைத்து வேண்டும் சமயத்தில் அழவேண்டும் என்று நினைத்து யாரும் அழுகையை வர வைக்க மாட்டார்கள்.

எப்போதும் போலவே சாதாரணமாகவே கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு கோவிலுக்கு சென்று இருப்போம். அந்த சமயத்தில் நாம் எதிர்பாராத விசேஷ பூஜைகளும், மேளதாளத்துடன் இறைவனின் தரிசனம் செய்யும் சூழ்நிலையும் நமக்கு அமைந்துவிடும்.

இதில் உங்கள் இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று இருந்தால் இன்னும் அந்த அனுபவத்தை சொல்லவே முடியாது. அந்த இறைவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களும், அலங்காரங்களையும், தீபாராதனையும் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள்.

உங்கள் மனதிற்குள் ஏதோ ஒன்றை சாதித்தது போல, நம் கஷ்டத்திற்க்கெல்லாம் எல்லாம் விடிவுகாலம் கிடைத்துவிட்டது போல, அந்த இறைவன் நேரடியாக வந்து உங்களை ஆசீர்வதித்து போல, இந்த ஜென்மமே பூர்த்தி அடைந்தது போல, சொர்கத்துக்கே சென்றது போல உடல் சிலிர்த்து உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பிக்கும். கோவிலில் உங்களைச் சுற்றி அத்தனை பேர் உள்ளார்கள் என்பதையும் மறந்து ஒரு சக்தியை நீங்கள் உணர்ந்தவர்களாக இருந்தால், நீங்கள் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகள் தான்.

அப்படிப்பட்ட உணர்வினை ஏற்படுத்தும் இடத்தில் நீங்கள் வேண்டிக்கொள்ளும் வேண்டுதலானது நிச்சயம் பலிக்கும் என்பது தான் உண்மை. இதில் எந்த விதமான மாய மந்திர சக்தியும் கிடையாது. அந்த இடத்தில் நீங்கள் தெய்வீக ஆற்றலை முழுமையாக உணர்ந்தீர்கள் என்பதுதான் அர்த்தம். அந்த இறைவனும் உங்களுடன் அந்த இடத்தில் இருந்து இருக்கின்றார் என்பதுதான் அர்த்தம்.

இதை பலபேர் அனுபவரீதியாக உணர்ந்து இருப்பார்கள். ஆனால் மற்றவர்களிடம் எப்படி கூறுவது என்று தெரியாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் ஒருமுறை உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவமானது திரும்பத் திரும்ப நீங்கள் அந்த கோவிலுக்கு செல்லும்போதெல்லாம் ஏற்படுமா என்று கேட்டால் அது சந்தேகம்தான். ஏனென்றால் அந்த நல்ல நேரம் காலம் சமயம் என்பது எல்லா நேரத்திலும் ஏற்படும் என்று நாம் எதிர்பார்க்க கூடாது.

இப்படி ஒரு அனுபவம் ஒருமுறையாவது ஏற்பட்டதை நினைத்து, இந்த அனுபவத்தை நமக்கு தந்த அந்த கடவுளுக்கு நன்றி தான் கூற வேண்டும். நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அந்த கடவுள் கல் தான்

அனுபவபூர்வமாக உணர்ந்தவர்களுக்கு அந்த கல் ‘கண்கண்ட தெய்வம்’. உண்மையான பக்தியும் வேண்டுதல்களும் இருக்கும் இடத்தில் உண்மையான கண்ணீர் வரும் சமயத்தை நீங்கள் உணர்ந்தவர்களாக இருந்தால் உங்களை விட அதிர்ஷ்டசாலி இந்த உலகத்தில் இல்லை.

author avatar
Kowsalya