பழம் மற்றும் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிப்பவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து பாருங்கள்!!

Photo of author

By Divya

பழம் மற்றும் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிப்பவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து பாருங்கள்!!

Divya

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டியது முக்கியமாக உள்ளது.இதற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.

ஆனால் பெரும்பாலானோருக்கு காய்கறி,பழங்கள் சாப்பிடுவது பிடிக்காத விஷயமாக இருக்கின்றது.ஆரோக்கியம் இல்லாத பாக்கட் உணவுகள்,ஜங்க் புட்ஸ்,பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர்.இதனால் இளம் வயதில் ஆபத்தான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

எனவே காய்கறி மற்றும் பழங்கள் பிடிக்காதவர்களை அவற்றை விரும்பி சாப்பிட வைக்க நாம் ஆரோக்கிய வழிகளை பின்பற்றலாம்.சிலருக்கு சில பழங்கள் பிடிக்காமல் இருக்கும்.அந்த பழங்களை மால்ட் பவுடராக பாலில் கலந்து கொடுக்கலாம்.

தற்பொழுது மால்ட் பவுடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.பீட்ரூட்,கேரட்,ஆப்பிள்,பருத்தி விதை,கொய்யா,அத்தி என்று பலவற்றில் மால்ட் பவுடர் தயாரிக்கப்படுகிறது.பழங்கள் சாப்பிடாதவர்களுக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க இவற்றை கொண்டு தயாரிக்கப்படும் மால்ட் பவுடரை சாப்பிட கொடுக்கலாம்.

அதேபோல் காய்களை சரியான முறையில் உலர்த்தி பவுடராக அரைத்து குழம்பு,கூட்டில் கலந்து சாப்பிடலாம்.காய்களை பவுடராக அரைத்து தண்ணீர்,பால் போன்றவற்றில் கலந்து குடித்தால் அதன் முழு சத்தும் கிடைத்துவிடும்.

ஒரு பழம் மற்றும் காய்கறியில் கிடைக்கும் சத்துதான் மால்ட் பவுடரில் கிடைக்கிறது.இயற்கையான முறையில் மருந்து அடிக்கப்படாத காய்கள் மற்றும் பழங்களை சரியான பக்குவத்தில் உலர்த்தி பொடித்து பயன்படுத்தினால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடும்.உங்கள் வீட்டில் சிலருக்கு சிலவகைஇ காய்கள் பிடிக்காமல் இருக்கலாம்.அவர்களுக்கு அந்த காயின் சத்து கிடைக்க அந்த காயை சாப்பிட வைக்க மேலே சொல்லியபடி செய்யலாம்.

அதேபோல் சிறு தானியங்கள் மற்றும் பாரம்பரிய அரசி வகைகளை அரைத்து பவுடராக்கி தோசை,இட்லி,கஞ்சி,கூழ் போன்ற உணவுகள் செய்து சாப்பிடலாம்.