என்னங்க சொல்றீங்க? விளாம்பழத்தை 21 நாட்கள் சாப்பிட்டால் இந்த நன்மை எல்லாம் இருக்கா?

Photo of author

By Kowsalya

விளாம்பழம் நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். அதேபோல் அதனை வாங்கி உண்டு ருசித்திருப்போம். இந்த விளாம்பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரும் பொழுது உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை பற்றி தான் இந்த பதிவு.

விளாம்பழத்தை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து நோய்களையும் நீக்கும் தன்மை கொண்டது. இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. அதனால் வாதம் பித்தம் ஆகியவற்றை நீக்கும் குணமுடையது.

விளாம்பழத்தின் நன்மைகள்:

1. விளாம்பழம் மிகச்சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு அருமையான பழம். விளாம்பழத்தில் அதிக அளவில் சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும் இருக்கின்றன.வைட்டமின் ஏ அதிகளவில் விளாம்பழத்தில் உள்ளதால் கண் குறைபாடுகள் அனைத்தையும் சரி செய்யும் தன்மை உடையது. கண் குறைபாடுகள் மற்றும் லேசாக கண் மங்குவது போன்ற குறைபாடுகளை விளாம்பழம் நீக்கும்.

2. தலை வலி பித்தத்தால் வரும் வாந்தி, பித்தத்தால் வரும் மயக்கம், காலையில் எழுந்தவுடன் மஞ்சள் நிறத்தில் வாந்தி எடுப்பது, வாய் கசப்பாகவே இருப்பது, பித்தத்தினால் வரும் கிறுகிறுப்பு, பித்தத்தினால் வரும் கை கால்களில் வியர்வை வடித்தல், பித்தத்தால் வரும் இளநரை மற்றும் பித்தத்தால் கை கால்கள் மரத்துப் போதல், நாக்கு மரத்து போதல் போன்ற அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வாக இருக்கிறது.

3. விளாம்பழம் இதை தொடர்ந்து சாப்பிட்டு வரும் போது ரத்தத்தில் உள்ள கிருமிகளை நீக்கும் தன்மை உடையது. நோய் எதிர்ப்பாற்றலை தந்து நோய்க்கிருமிகளை ரத்தத்திலிருந்து வெளியேற்றுகிறது. எந்த ஒரு நோயும் ரத்தத்தில் பரவாமலிருக்க உதவுகிறது. உணவுப் பழக்கங்களால் வரும் அஜீரணக் கோளாறுகளை நீக்கி பசியைத் தூண்ட வல்லது.

4. நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு விளாம்பழம் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதேபோல் உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாட்டினால் வரும் தலைமுடியில் உண்டாகும் அதிகப்படியான வறட்சி மற்றும் சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான வறட்சி ஆகியவற்றுக்கு தீர்வாக இருக்கிறது.

5. நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்கள் விளாம்பழத்தை உடைத்து உள்ளே உள்ள சோற்றை மட்டும் தனியாக எடுத்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு அடுத்த நாள் காலையில் சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி குணமடையும்.

6. பெண்களுக்கு ஏற்படுகின்ற மாதவிடாய் பிரச்சனை,வெள்ளைப்படுதல் பிரச்சனை, புற்று நோய் பிரச்சனை ஆகியவற்றிற்கு விளாம்பழம் ஒரு தீர்வாக அமைகிறது.

7. விளாமரத்தில் உள்ள பிசினை எடுத்து பாலில் கலந்து குடித்து வர மாதவிடாய் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை உடையது.

 

இவ்வளவு நன்மை தரும் விளாம்பழத்தை கடையோரங்களில் கிடைத்தால் வாங்கி ருசித்து சாப்பிடுங்கள்.