உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.
இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்கும் வீட்டு வைத்தியங்கள்:
1)அதிமதுர சூரணம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
அதிமதுர சூரணம் நாட்டு மருந்து கடைகளில் விறக்கப்படுகிறது.இதை 100 கிராம் சூரணமாக வாங்கிக் கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த அதிமதுர சூரணம் ஒரு தேக்கரண்டி அளவு அதில் சேர்த்து கொதிக்க வைத்து பருகி வந்தால் இரத்த வெள்ளையணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.
1)ஓமம் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
ஓமத்தை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இப்பொழுது வறுத்த ஓமத்தை அதில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.இந்த ஓம பானத்தை பருகி வந்தால் இரத்த வெள்ளையணுக்கள் அதிகரிக்கும்.
1)பப்பாளி இலை – அளவு
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
3)தேன் – ஒரு தேக்கரண்டி
ஒரு பப்பாளி இலையை பொடியாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பப்பாளி ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
1)வெள்ளைப்பூண்டு பல் – இரண்டு
2தேன் – இரண்டு தேக்கரண்டி
இரண்டு வெள்ளைப்பூண்டை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.இந்த பூண்டு பற்களை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
1)இஞ்சி – ஒரு துண்டு
2)தேன் – ஒரு தேக்கரண்டி
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கிவிட்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த இஞ்சி பானம் கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து பருக வேண்டும்.இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
1)பாதாம் பாருப்பு – நான்கு
2)தண்ணீர் – தேவையான அளவு
பாதாம் பருப்பை கிண்ணம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.மறுநாள் ஊறவைத்த பாதாம் பருப்பின் தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும்.இப்படி செய்து வந்தால் இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.