இதய நோய் தீர, இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்க அருமையான நாட்டு வைத்தியம்!

Photo of author

By Kowsalya

இன்று அனைவரும் பாதிக்கப்படும் ஒரு நோய் என்றால் அது இதய நோய். சிறுவயதிலேயே இதய நோய் அனைவருக்கும் வந்துவிடுகிறது. காரணம் அது உணவுப் பழக்கங்களால் மட்டுமே. ஏன் சிறு பிள்ளைகளுக்கு கூட இதய நோய் வந்துவிடுகிறது. அப்படிப்பட்ட இதய நோய் மற்றும் இதயத்தில் உள்ள அடைப்பு, ரத்தக் குழாயில் உள்ள கொழுப்பு ஆகியவற்றை நீக்க அற்புதமான பாட்டி வைத்தியம். இந்த இயற்கை கசாயத்தை தொடர்ந்து நீங்கள் குடித்துவர இதய நோயில் இருந்து விடுபடலாம். மேலும் இதயநோய் இருந்தாலும் குணமடைந்து விடும். அது என்னவென்று வாருங்கள் பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

1. ரோஜா பூ 100 கிராம்

2. செம்பருத்திப்பூ 100 கிராம்

3. தாமரைப் பூ 100 கிராம்

4. ஆவாரம்பூ 100 கிராம்

5. துளசி 100 கிராம்

6. சுக்கு 10 கிராம்

7. ஏலக்காய் 10 கிராம்.

செய்முறை:

1. மேலே கொடுக்கப்பட்டுள்ள ரோஜா பூ, செம்பருத்திப் பூ, தாமரை பூ, ஆவாரம் பூ, துளசி, சுக்கு, ஏலக்காய் ஆகியவற்றை நிழலில் காய வைத்து உலர்த்தி பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

2. இந்தப் பொடியை தேவையான அளவு எடுத்து கொதிக்க வைத்து கசாயமாக குடிக்கலாம்.

3. இல்லையெனில் சிறு உருண்டைகளாக பிடித்து சூரணமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

4. இதை அதிகாலையில் நீங்கள் சாப்பிட்டு வர ரத்தத்தில் உள்ள அழுத்தம் குறையும்.

5. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறையும்.

6. இதயம் சீராகும், மன நிம்மதி கிடைக்கும்.

7. மேலும் இதய நோய் அனைத்தும் குணமாகும்.

இதை தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டு வர உங்களுக்கே மாற்றம் தெரியும். இதய நோய் என்று ஆங்கில மருத்துவர்களிடம் சென்று அதிகமாக செலவை பெற்றுக்கொள்ளாமல் இந்த மாதிரியான இயற்கை வைத்தியத்தைப் பயன்படுத்தி உங்களது இதயத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.