உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

Photo of author

By Divya

உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்கள் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்..!!

*சிவன் கோயில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற விரைவில் நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகமாகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக ஐதீகம் உண்டு.

*வீட்டு பூஜை அறையில் ஒரு கிண்ணத்தில் கல் உப்பு நிரப்பி வழிபட்டு வந்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்.

*பிரதோஷங்களில், ரிஷப ரூட மூர்த்தியாய், மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப்படும் தீபாராதனையை பார்த்தால் எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும் என்பது ஐதீகம்.

*நீங்கள் கொடுத்தக் கடன் திரும்ப கிடைக்க பைரவர் சந்நிதியில் தொடர்ந்து எட்டு செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

*ஜாதகப்படி சனி பகவானின் பாதிப்பு குறைய திங்கட் கிழமைகளில் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில் தேங்காய் உடைத்து இரண்டு மூடிகளிலும் நல்லெண்ணெய் ஊற்றி எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.
சிவன் கோயிலில் கால பைரவரையும், விஷ்ணு கோயிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.