தேனுடன் இதை கலந்து சாப்பிட டான்ஸில் தொண்டை புண் சரியாகும்!

0
97

நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் கிருமிகளை ஆராய்வது டான்சிலின் வேலை. சில நேரங்களில் பலம் வாய்ந்த கிருமிகளான பாக்டீரியா, அடினோ வைரஸ், ஃபுளூ வைரஸ், டிப்தீரியா, பாக்டீரியா போன்ற கிருமிகள் முதலில் தாக்குவதை டான்சிலைத் தான். அதனால் தொண்டைச் சதையில் வீக்கம், வலி என டான்சில் அழற்சி உண்டாகிறது.

இதனால் பலர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள் ஆனால் அது முற்றிலும் தவறு.

இந்த பிரச்சனையை ஒரு வாரத்தில் தீர்க்கும் இயற்கை முறையான பாட்டி வைத்தியத்தை பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

1. நல்லெண்ணெய்

2. பூண்டு

3. விளக்கு மற்றும் திரி

4. காட்டன் துணி

5. தேன்

செய்முறை:

1.முதலில் 10 அல்லது 15 பல் பூண்டை தோல் உரிக்காமல் தோலுடையே எடுத்துக் கொள்ளவும்.

2.அந்த பூண்டை எடுத்து நன்றாக இடித்து கொள்ளவும்.

3.எடுத்த பின்னும் காட்டன் துணியில் போட்டு அந்த பூண்டை மூட்டை கட்டிக் கொள்ளவும்.

4.விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரியை வைத்து தீபம் ஏற்றவும்.

5.எரியும் தீயில் கட்டிவைத்த பூண்டு மூட்டையை காண்பிக்கவும்.

6.மூட்டையை தீயில் காண்பித்தவுடன் அது லேசாக கருகும்.

கொஞ்சம் லேசாக வதங்கியதும் அதை வடிகட்டினால் அதிகமாக பூண்டு எண்ணெய் கிடைக்கும்.

இந்த எண்ணெய்யை ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

இந்த பூண்டு எண்ணெய்யோடு சம அளவு தேன் எடுத்து கலந்து காலையிலும் மாலையிலும் ஒரு வாரம் சாப்பிட்டு வர டான்சில் தொண்டை கட்டிகள் மறையும்.

சாப்பாட்டை நன்கு மென்று முழுங்கி வாருங்கள். அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ உணவை உண்ணுவதை தவிர்த்து விடுங்கள்.

 

 

 

 

 

Previous articleஇந்தியாவில் 65 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
Next articleரயில் முன்பதிவு குறுஞ்செய்தி ஹிந்தியில் வந்ததற்கு திமுக எம்.பி கண்டனம் !!