இதை சாப்பிட்டால் போதும் 2 வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறையும்!

Photo of author

By Kowsalya

இதை சாப்பிட்டால் போதும் 2 வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறையும்!

உடல் எடை குறைவதற்கு டயட் முறைகளை பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையா? இதோ உங்களுக்கான அருமையான இயற்கை வழி. இதனை நீங்கள் பயன்படுத்தி வரும் போது இரண்டு வாரத்தில் 5 கிலோ உடல் எடையை குறைக்க முடியும்.

தேவையான பொருட்கள்:

1. கொத்தமல்லி விதை 2 ஸ்பூன்

2. சீரகம் ஒரு ஸ்பூன்

3. சோம்பு ஒரு ஸ்பூன்

4. கருஞ் சீரகம் ஒரு ஸ்பூன்

5. மிளகு அரை ஸ்பூன்

6. வெந்தயம் அரை ஸ்பூன்

7. நாட்டுச்சக்கரை 3 ஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் அடுப்பில் கடாயை வைத்து நன்கு சூடானவுடன் அதில் கொத்தமல்லி விதை, சீரகம், சோம்பு, கருஞ்சீரகம், வெந்தயம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.

2. அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுக்கவும்.

3. வறுத்தவுடன் சூடு ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

4. அதில் 3 ஸ்பூன் அளவிற்கு நாட்டுச் சர்க்கரையை கலந்து கொள்ளவும்.

5. இனிப்பு சுவை வேண்டாம் என்று நினைப்பவர்கள் தவிர்த்து விடலாம்.

6. இதை  ஒரு கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். சீக்கிரம் கெடாது.

பயன்படுத்தும் முறை:

1. அடுப்பில் பாத்திரத்தை வைத்து 1.5 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

2. ஒரு கொதி வந்ததும் ஒரு ஸ்பூன் அளவுக்கு பொடித்து வைத்த பொடியை போடவும்.

3. நன்கு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

4. 1.5 டம்ளர் தண்ணீர் 1 டம்ளராக வரவேண்டும்.

5. இதை காலையில் வெறும் வயிற்றில் ஒருதரம் குடியுங்கள் மற்றும் மாலையில் டீ காபி அருந்தும் நேரங்களில் டீ காபிக்கு பதிலாக அருந்தலாம்.

இதனை பயன்படுத்தி பாருங்கள் உங்கள் உடல் எடை குறைவதை கண்கூடாக பாருங்கள்.

இந்த பானம் உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை மற்றும் கொழுப்புகளை நீக்கி இரண்டே வாரத்தில் உடல் அளவை குறைக்க செய்யும்.