வறண்ட மலம் இளகி வெளியேற.. இந்த எளிய வீட்டு வைத்தியத்தை முயற்சித்து பாருங்கள்!!

மனிதர்கள் அனைவரும் காலையில் எழுந்ததும் காலை கடனை முடிக்க வேண்டியது முக்கியம்.காலை நேர்தத்தில் தானாகவே மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் அது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

சிலர் மலக் கழிவுகளை வெளியேற்ற வெந்நீர் பருகுவார்கள்.இன்னும் சிலர் டீ,காபி போன்ற பானங்களை பருகுவார்கள்.சிலர் அடிக்கடி பேதி மாத்திரை சாப்பிட்டு மலத்தை வெளியேற்ற முயற்சிப்பார்கள்.இவ்வாறு கஷ்டப்பட்டு மலம் கழிக்கும் நபர்கள் மலச்சிக்கல் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர் என்று அர்த்தம்.

முக்கி முக்கி மலத்தை வெளியேற்றுவது ஆரோக்கியத்திற்கு உகந்த விஷயம் அல்ல.எனவே இனி முக்காமல் தானாக மலம் கழிக்கும் உணர்வு உண்டாக இங்கு சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தினமும் காலையில் பின்பற்றுங்கள்.

வீட்டு வைத்தியம் 01:

கடுக்காய் தூள் – கால் தேக்கரண்டி
நிலாவாரை பூ பொடி – கால் தேக்கரண்டி

சூடான நீர் ஒரு கிளாஸ் அளவு தயாரித்து கடுக்காய் தூள் மற்றும் நிலாவாரை பூ பொடி ஆகிய இரண்டையும் கால் தேக்கரண்டி அளவு சேர்த்து நன்றாக கலந்து பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

வீட்டு வைத்தியம் 02:

ஆவாரம் பூ – ஒரு தேக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
தேன் – ஒரு தேக்கரண்டி

ஒரு பாத்திரத்தை எடுத்து ஆவாரம் பூ,சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.பிறகு இதை கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து பருகினால் மலச்சிக்கல் நீங்கும்.

வீட்டு வைத்தியம் 03:

இஞ்சி – ஒரு துண்டு
எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
தேன் – ஒரு தேக்கரண்டி

இந்த மூன்று பொருட்களை கொண்டு மலச்சிக்கலை போக்கும் மூலிகை ஒன்றை தயாரிக்க வேண்டும்.

இதற்கு முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு துண்டு தோல் நீக்கிய இஞ்சி போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.